பிரபல டாப் ஹீரோ ஜோடியாகிறார் சாய் பல்லவி?

பிரபல டாப் ஹீரோ ஜோடியாகிறார் சாய் பல்லவி?

பிரபல பான் இந்தியா ஹீரோ ஜோடியாக, சாய் பல்லவி நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.

தமிழ், தெலுங்கில் நடித்து வரும் சாய் பல்லவி, அடுத்து சிவகார்த்திகேயன் ஜோடியாக நடிக்க இருக்கிறார். இந்தப் படத்தை கமலஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிக்கிறது. ராஜ்குமார் பெரியசாமி இயக்குகிறார். இந்நிலையில் பிரபல தெலுங்கு நடிகர் ஜூனியர் என்.டி.ஆர் ஜோடியாக நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.

ராஜமவுலி இயக்கிய ‘ஆர்ஆர்ஆர்’ படம் மூலம் பான் இந்தியா ஸ்டாராகி இருக்கும் ஜூனியர் என்.டி.ஆர், அடுத்து கொரட்டலா சிவா இயக்கும் படத்தில் நடிக்கிறார். பான் இந்தியா முறையில் தமிழ்,தெலுங்கு, இந்தி, கன்னடம் மற்றும் மலையாள மொழிகளில் இந்தப் படம் உருவாகிறது. இதில் நாயகியாக இந்தி நடிகை ஆலியா பட் ஒப்பந்தமானார். அவருக்குத் திருமணமானதால், திடீரென விலகினார்.

இதையடுத்து ஜான்வி கபூர் நடிப்பதாகக் கூறப்பட்டது. ஆனால், அவர் அதை மறுத்தார். இந்நிலையில், இந்தப் படத்தில் சாய் பல்லவி நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. ஆனால், இதுபற்றி படக்குழுவிடம் கேட்டபோது, இன்னும் யாரையும் இறுதி செய்ய வில்லை என்று கூறப்பட்டது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in