’ராதே ஷ்யாம்’: செட்டுக்காக மட்டுமே ரூ.100 கோடி செலவா?

ராதே ஷ்யாம் - பிரபாஸ், பூஜா ஹெக்டே
ராதே ஷ்யாம் - பிரபாஸ், பூஜா ஹெக்டே

’ராதே ஷ்யாம்’ படத்துக்கு அமைக்கப்பட்ட அரங்கங்களுக்காக மட்டுமே, ரூ.100 கோடி செலவழிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

’பாகுபலி’ பிரபாஸ் நடிப்பில் உருவாகியுள்ள, பான் இந்தியா திரைப்படம் ’ராதே ஷியாம்’. பூஜா ஹெக்டே நாயகியாக நடித்துள்ளார். பிரபாஸ், விக்ரம் ஆதித்யா என்ற கைரேகை நிபுணராகவும் டாக்டர் பிரேர்னா எனும் கேரக்டரில் பூஜா ஹெக்டேவும் நடித்துள்ளனர். இந்தி நடிகை பாக்கியஸ்ரீ, சச்சின் கெடேக்கர், ஜெகபதி பாபு, பிரியதர்ஷினி உட்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ராதே ஷ்யாம் - பிரபாஸ்
ராதே ஷ்யாம் - பிரபாஸ்

ராதா கிருஷ்ணகுமார் இயக்கியுள்ள இந்தப் படத்தை, யுவி கிரியேஷன்ஸ் தயாரித்துள்ளது. ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார். மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்துள்ளார். பின்னணி இசையை தமன் அமைத்துள்ளார். படத்தின் தமிழ் வசனங்களையும் பாடல்களையும் மதன் கார்க்கி எழுதியுள்ளார்.

’ராதே ஷ்யாம்’ படத்துக்கான ரயில்வே ஸ்டேஷன் செட்
’ராதே ஷ்யாம்’ படத்துக்கான ரயில்வே ஸ்டேஷன் செட்

தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாள மொழிகளில் மார்ச் 11-ம் தேதி படம் வெளியாகிறது. தமிழகத்தில் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவீஸ் வெளியிடுகிறது. பீரியட் படமான இது, ஐரோப்பிய பின்னணியில் நடக்கும் காதல் கதையைக் கொண்டது.

மெகா பட்ஜெட் படமான இதற்கு அரங்குகள் அமைக்க மட்டுமே, ரூ.100 கோடி செலவழிக்கப்பட்டுள்ளதாக இப்போது தகவல்கள் வெளியாகியுள்ளன. பீரியட் படம் என்பதால், 1970-ம் காலகட்ட செட் அமைத்து பல காட்சிகளை படமாக்கியுள்ளனர். அதற்காக படத்தின் பட்ஜெட்டில் செட்டுக்காகவே தயாரிப்பாளர் பெரும் தொகையை ஒதுக்கி இருக்கிறார். இந்தப் படத்துக்கான அரங்குகளை, கலை இயக்குநர் ரவீந்திர் ரெட்டி தலைமையிலான குழு அமைத்துள்ளது. அதேபோல, கிராபிக்ஸ் காட்சிகளுக்காகவும் அதிக பட்ஜெட்டை படக்குழு ஒதுக்கி இருப்பதாக கூறப்படுகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in