நடிகை மீனாவின் கணவர் மரணத்திற்குக் காரணம் புறாக்களா?

நடிகை மீனாவின் கணவர் மரணத்திற்குக் காரணம் புறாக்களா?

புறாக்களின் எச்சத்தால் நுரையீரல் பிரச்சினை ஏற்பட்டு தனது கணவர் வித்யாசாகர் இறந்ததாக நடிகை மீனா கூறியுள்ளார்.

தமிழ் திரையுலகில் 1990-ம் ஆண்டு காலக்கட்டத்தில் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் மீனா. இவர் ரஜினிகாந்த், கமல்ஹாசன், அஜித், கார்த்திக் உள்பட அனைத்து முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம் உள்பட பல்வேறு மொழிப்படங்களில் அவர் நடித்துள்ளார்.

இந்த நிலையில், நடிகை மீனாவுக்கும், பெங்களூருவைச் சேர்ந்த வித்யாசாகருக்கும் கடந்த 2009-ம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களுக்கு நைனிகா என்ற மகள் உள்ளார். இதனிடையே, கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த வித்யாசாகருக்கு நுரையீரல் பாதிப்பு இருந்தது.

இந்த நிலையில் ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வித்யாசாகர், மேல் சிகிச்சைக்காக மற்றொரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி ஜூன் 28-ம் தேதி காலமானார்.

தனது கணவர் மரணம் குறித்து முதன்முறையாக நடிகை மீனா மனம் திறந்து பேசியுள்ளார். அதில்," எனது கணவர் இறப்பு எதிர்பார்க்காமல் நடந்தது. நாங்கள் நினைத்தது ஒன்று, நடந்தது ஒன்று. வித்யாசாகர் தங்கியிருந்த மும்பை அபார்ட்மெண்டில் அதிக புறாக்கள் இருந்தன. அதன் எச்சத்தினால் தான் வித்யாசாகருக்கு நுரையீரல் பிரச்சினை ஏற்பட்டது. கரோனாவிலிருந்து மீண்டும், ஏற்கெனவே நுரையீரல் பாதிக்கப்பட்ட வித்யாசாகர் மீள முடியாமல் உயிரிழந்து விட்டார்" என்று கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in