ஜெயம் ரவி படத்துக்காக நயன்தாரா சம்பளம் இவ்வளவு கோடியா?

ஜெயம் ரவி படத்துக்காக நயன்தாரா சம்பளம் இவ்வளவு கோடியா?

ஜெயம் ரவி படத்தில் நடிக்கும் நயன்தாராவுக்கு கோடிக்கணக்கில் சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

ஜெயம் ரவி நடித்திருக்கும் ‘பொன்னியின் செல்வன்' படம் ஆகஸ்ட் மாதம் திரைக்கு வருகிறது. அடுத்து அவர் நடிக்கும் ‘அகிலன்' படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடந்து வருகிறது. இதற்கு முன்பு, ’ஜனகனமன’ படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருந்தார். அகமது இயக்கினார். பேஷன் ஸ்டூடியோஸ் தயாரிக்கும் இந்தப் படத்தின் இரண்டு ஷெட்யூல்கள் நிறைவடைந்தன.

மற்றக் காட்சிகள் வெளிநாட்டில் படமாக்க வேண்டும் என்ற நிலையில், கரோனா காரணமாக தொடர முடியவில்லை. அதனால், அந்தப் படம் பாதியில் நிற்கிறது. இதற்கிடையே, அதே நிறுவனம் தயாரிக்கும் மற்றொரு படத்தை அகமது இயக்குகிறார்.

இதில், ஜெயம் ரவி ஹீரோ. நயன்தாரா நாயகியாக நடிக்கிறார். சைக்காலஜிக்கல் த்ரில்லர் படமான இதில் நடிக்க நயன்தாராவுக்கு சுமார் ரூ.10 கோடி சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

தென்னிந்திய சினிமாவில் ஒரு ஹீரோயின் வாங்கும் அதிகப்பட்ச சம்பளம் இது. அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிக்கும் இந்தி படத்தில் நடிப்பதால் நயன்தாரா தனது சம்பளத்தை உயர்த்தி இருப்பதாகக் கூறப்படுகிறது.

அவர் 20 நாட்கள் மட்டுமே இந்தப் படத்துக்கு கால்ஷீட் கொடுத்துள்ளார். அவர் நடிக்கும் காட்சிகள் வரும் 19-ம் தேதி முதல் சென்னையில் தொடங்குவதாக சினிமா வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in