சிம்புவின் நடிப்பில் உருவாகிறதா 'மன்மதன் 2’?

சிம்புவின் நடிப்பில் உருவாகிறதா 'மன்மதன் 2’?

நடிகர் சிம்புவின் ‘மன்மதன்’ படத்தின் இரண்டாம் பாகத்திற்கான பணிகள் தொடங்கியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் இரண்டாம் பாகத்திற்கான சீசன் இது. வெற்றிப் பெறும் படங்களின் அடுத்த பாகத்திற்கான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையேயும் அதை உருவாக்கும் ஆர்வம் திரைத்துறையினரிடையேயும் இருக்கிறது.

இந்த வரிசையில், நடிகர் சிலம்பரசனின் நடிப்பில் கடந்த 2004-ம் வருடம் வெளியாகி வரவேற்பைப் பெற்ற படம் ‘மன்மதன்’.

நடிகர் சிம்பு இரண்டு வேடங்களிலும், நடிகை ஜோதிகா நாயகியாகவும் நடித்திருந்த இந்தப் படத்தை ஏஜே முருகன், கதை, திரைக்கதை, எழுதி இயக்கி இருந்தார்.

'இந்தியன் தியேட்டர் ப்ரொட்க்சன்' நிறுவனம் 5 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு மிகப்பெரிய வெற்றி பெற்று, வசூல் ரீதியாகவும் வரவேற்பைப் பெற்றது.
மேலும் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையில், படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களும் நல்ல வரவேற்பை பெற்றன. 'மன்மதன்' திரைப்படம் வெளியாகி 18 வருடங்கள் ஆகும் நிலையில், இந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கி, நடிக்க சிம்பு முடிவு செய்துள்ளதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது.

’மன்மதன்’ திரைப்படம் வெளியான சமயத்தில் தெலுங்கு, கன்னடம் போன்ற மொழிகளில் டப் செய்யப்பட்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றதால், 'மன்மதன் 2' பான் இந்தியா படமாக உருவாக வாய்ப்புள்ளதாகவும் சொல்கிறது கோலிவுட் வட்டாரம். இந்தத் தகவல் உறுதியானால் படம் குறித்தான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.

’பத்துதல’ படத்தில் பிஸியாக இருக்கும் சிம்புவின் ‘வெந்து தணிந்தது காடு’ மற்றும் ‘விண்ணைத் தாண்டி வருவாயா’ ஆகிய படங்களில் இரண்டாம் பாகத்திற்கு ரசிகர்கள் மத்தியில் அதிகம் எதிர்பார்ப்பு இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in