ஒரு சிபிஐ டைரி குறிப்பு 6-வது பாகம் உருவாகிறதா?

ஒரு சிபிஐ டைரி குறிப்பு 6-வது பாகம் உருவாகிறதா?

ஒரு சிபிஐ டைரி குறிப்பு படத்தின் 6-ம் பாகம் உருவாக இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

கே.மது இயக்கத்தில் சேதுராம அய்யர் கேரக்டரில் மம்முட்டி நடித்த மலையாளப் படம், ‘ஒரு சிபிஐ டைரி குறிப்பு’. இது 1988-ம் ஆண்டு வெளியாகி வரவேற்பைப் பெற்றது. ராதா வினோத் ராஜு என்ற ஐபிஎஸ் அதிகாரியை இன்ஸ்பிரேஷனாக வைத்து மம்முட்டியின் சேதுராம அய்யர் கேரக்டர் உருவாக்கப்பட்டது.

கடந்த 1989-ம் ஆண்டு இந்தப் படத்தின் 2-ம் பாகம் ‘ஜாக்ரதா’ என்ற பெயரிலும், மூன்றாம் பாகம் ‘சேதுராம அய்யர் சிபிஐ’ என்ற பெயரிலும், நான்காம் பாகம் ‘நேரறியான் சிபிஐ’ என்ற பெயரிலும் வெளியானது. இந்நிலையில் இதன் ஐந்தாம் பாகம் ‘சிபிஐ 5: தி பிரெய்ன்’ என்ற பெயரில் கடந்த 1-ம் தேதி வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. 5 பாகங்களிலும் கே.மது, எஸ்.என்.சுவாமி, மம்முட்டி, முகேஷ் இணைந்து பணியாற்றி இருந்தனர்.

இப்படத்தின் 6-ம் பாகம் விரைவில் உருவாக இருப்பதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து பேசிய நடிகர் மம்முட்டி, ``துப்பறியும் பாணியில் இருந்து மாறி, ஊழல் மற்றும் கொள்ளையை கண்டுபிடிப்பது போல் கதை உருவாக்கும்படி கூறியிருக்கிறேன். ஒரு வேளை 6-ம் பாகம் இதை மையமாக வைத்து உருவாகலாம்'’ என்று தெரிவித்துள்ளார்.

அப்படி உருவானால், சினிமா வரலாற்றில் ஒரு கேரக்டரை வைத்து 6-வது பாகமாக உருவாக்கப்படும் திரைப்படம் இதுவாகத்தான் இருக்கும் என்று கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in