பான் இந்தியா ஸ்டாரை இயக்குகிறாரா லோகேஷ் கனகராஜ்?

பான் இந்தியா ஸ்டாரை இயக்குகிறாரா லோகேஷ் கனகராஜ்?

பிரபல தெலுங்கு ஹீரோ அல்லு அர்ஜுனை, லோகேஷ் கனகராஜ் இயக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.

’மாநகரம்’ படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர், லோகேஷ் கனகராஜ். அடுத்து கார்த்தி நடிப்பில் ’கைதி’ படத்தை இயக்கினார். இந்தப் படமும் வரவேற்பைப் பெற்றது. இதையடுத்து விஜய் நடிப்பில் அவர் இயக்கிய ’மாஸ்டர்’ படம் ஹிட்டானது. அடுத்து கமல்ஹாசன் நடிப்பில் ’விக்ரம்’ படத்தை இயக்கினார்.

இதில் பகத் பாசில், விஜய் சேதுபதி, செம்பன் வினோத், நரேன் உட்பட பலர் நடித்தனர். அனிருத் இசை அமைத்திருந்தார். இந்தப் படம் சூப்பர் டூப்பர் ஹிட்டாக ஓடிக்கொண்டிருக்கிறது. விரைவில் அவர், விஜய் நடிக்கும் படத்தை இயக்க இருக்கிறார். இதற்கிடையே மற்ற ஹீரோக்களுக்கும் அவர் கதை சொல்லி வருகிறார்.

நடிகர் பிரபாஸுக்கு சமீபத்தில் கதை சொன்னதாகவும் அவர் அதை நிராகரித்ததாகவும் செய்திகள் வெளியாயின. இந்நிலையில் அவர், அல்லு அர்ஜுனை சந்தித்து கதைச் சொல்லியதாகக் கூறப்படுகிறது, ’புஷ்பா’ படத்தின் வெற்றி மூலம் பான் இந்தியா ஸ்டாராக உருவெடுத்திருக்கிற அல்லு அர்ஜுன், 'புஷ்பா 2' படத்துக்குப் பின் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.

இதற்கிடையே சமீபத்தில் கமல்ஹாசனுடன் சிரஞ்சீவியை சந்தித்த லோகேஷ் கனகராஜ், ராம் சரணுக்குக் கதை சொன்னதாகவும் அடுத்து அவர் நடிக்கும் படத்தை இயக்க இருப்பதாகவும் தெலுங்கு சினிமா வட்டாரத்தில் செய்திகள் வெளியாகியுள்ளன. ஆனால், இது வதந்தியா, உண்மையா என்பதை லோகேஷ்தான் உறுதிப்படுத்த வேண்டும்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in