’லியோ’ விஜய்
’லியோ’ விஜய்

2 பாகங்களாக உருவாகிறதா 'லியோ’?... எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!

‘லியோ’ திரைப்படம் இரண்டு பாகங்களாக உருவாக வாய்ப்பிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர்கள் விஜய், த்ரிஷா, சஞ்சய் தத் எனப் பலரும் நடித்துள்ள திரைப்படம் ‘லியோ’. இதன் பேட்ச் வொர்க் மற்றும் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இந்த நிலையில் ‘லியோ’ படத்திற்கு இரண்டாம் பாகம் உருவாக வாய்ப்பிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. லோகேஷின் முந்தைய திரைப்படங்களான ‘கைதி’, ‘விக்ரம்’ போலவே ‘லியோ’ திரைப்படமும் ஓபன் எண்டிங் கிளைமாக்ஸூடன் முடிவடைய இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதுவே இரண்டாம் பாகத்திற்கான லீடாக இருக்கும் என ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

ரசிகர்கள் எதிர்பார்ப்பினைப் போலவே ‘லியோ’ திரைப்படம் இரண்டு பாகங்கள் உறுதியானால் இரண்டாம் பாகம் வரும் விஜய்யின் முதல் படம் இதுவாகவே இருக்கும். ரஜினியின் ‘எந்திரன்’, கமல்ஹாசனின் ‘இந்தியன்’, அஜித்தின் ‘பில்லா’, சூர்யாவின் ‘சிங்கம்’ போல ‘லியோ’ திரைப்படமும் வசூலிலும் கதையாகவும் மிகப்பெரிய வெற்றி பெறும் என ரசிகர்கள் நம்பிக்கைத் தெரிவித்து வருகின்றனர்.

x
காமதேனு
kamadenu.hindutamil.in