திரைப்படமாகிறதா கருணாநிதியின் வாழ்க்கை வரலாறு?

திரைப்படமாகிறதா கருணாநிதியின் வாழ்க்கை வரலாறு?

மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக்க முயற்சிகள் நடந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் வாழ்க்கை வரலாற்றைத் திரைப்படமாக்க முயற்சிகள் நடந்து வருகிறது. கருணாநிதியின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக்க இயக்க எந்த இயக்குநரைத் தேர்ந்தெடுக்கலாம் என்ற பேச்சுவார்த்தையும் ஒரு பக்கம் அறிவாலயத்தில் தீவிரமாக நடந்து வருகிறது. இதில் பட்டியலில் உள்ள இயக்குநர்கள் தேர்வில் வெற்றிமாறனே உதயநிதி உள்ளிட்டப் பலரின் முதல் தேர்வாக இருக்கிறது. ஆனால், வெற்றிமாறன் தற்போது ‘விடுதலை’, ‘வாடிவாசல்’ ஆகிய படங்களின் படப்பிடிப்பு மற்றும் கதை விவாதத்தில் பிஸியாக இருப்பதால் அவர் தரப்பில் இருந்து இன்னும் எந்தவிதமான பதிலும் வரவில்லை.

‘கருணாநிதியின் வாழ்க்கை வரலாற்றை படமாக்க முடியுமா?’ என்ற கோரிக்கையும் அறிவாலயம் தரப்பில் இருந்து வெற்றிமாறனுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. அவர் சம்மதம் தெரிவித்தால் விரைவில் பிரம்மாண்டமான பொருட்செலவில் சரித்திர படமாக்கவே திட்டமிட்டுள்ளார்களாம். எல்லாம் கைகூடி வந்தால் இது குறித்தான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கலாம்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in