நடிகர் பிரபாஸூக்கு வில்லனாகும் கமல்ஹாசன்?

நடிகர் பிரபாஸூக்கு வில்லனாகும் கமல்ஹாசன்?
நடிகர் பிரபாஸூக்கு வில்லனாகும் கமல்ஹாசன்?

நடிகர் பிரபாஸின் அடுத்த பான் இந்தியா படத்தில் நடிகர் கமல்ஹாசன் வில்லனாக நடிக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

’ஆதி புருஷ்’, ‘சலார்’ ஆகிய படங்கள் வெளியீட்டுக்குத் தயாராக உள்ள நிலையில், நடிகர் பிரபாஸ் இயக்குநர் நாக அஸ்வினுடன் இணையும் ‘புராஜெக்ட் கே’ படம் மீது ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. சயின்ஸ் ஃபிக்‌ஷன் கதையாக உருவாக இருக்கும் இந்தப் படத்தில் பிரபாஸ் ஜோடியாக தீபிகா படுகோனே நடிக்கிறார். அமிதாப் பச்சன் முக்கிய வேடத்தில் நடிக்க, இந்தப் படத்தில் தான் நடிகர் கமல்ஹாசன் வில்லனாக நடிக்கிறார். இது குறித்தான பேச்சுவார்த்தை அவரிடம் தொடங்கி இருக்கும் நிலையில் இன்னும் உறுதி செய்யப்படவில்லை.

இந்தப் படத்தில் நடிப்பது உறுதியானால் 20 நாட்கள் கால்ஷீட் ஒதுக்க இருக்கிறார் கமல். மேலும், இந்தப் படத்திற்காக இவரது சம்பளம் கிட்டத்தட்ட 150 கோடி எனவும் சொல்லப்படுகிறது. 500 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகும் இந்தப் படம் அடுத்த ஆண்டு ஜனவரி சங்கராந்தி பண்டிகையை ஒட்டி வெளியிட திட்டமிட்டு இருக்கிறார்கள். இந்திய சினிமாவிலேயே அதிக பட்ஜெட்டில் உருவாகும் படம் இது என சொல்லப்படும் நிலையில் இரண்டு பாகங்களாக படமாக்கவும் திட்டமிட்டுள்ளனர். இது குறித்தான அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு விரைவில் அறிவிக்கும் என எதிர்பார்க்கலாம்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in