
நடிகர் ‘ஜெயம்’ ரவியின் ‘அகிலன்’ திரைப்படம் வருகிற பிப்ரவரி மாதம் வெளியாக வாய்ப்பிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
கல்யாண கிருஷ்ணகுமார் இயக்கத்தில் நடிகர்கள் ‘ஜெயம்’ ரவி, ப்ரியா பவானி ஷங்கர் உள்ளிட்டப் பலர் நடித்திருக்கக்கூடியத் திரைப்படம் ‘அகிலன்’. இதன் படப்பிடிப்பு கடந்த வருடமே நிறைவடைந்திருக்கிறது. காப்- கேங்க்ஸ்டர் படமாக உருவாகி இருக்கக்கூடிய இதன் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. கடந்த வருடம் டிசம்பர் மாதத்தில் கிறிஸ்துமஸ் விடுமுறையின் போதே படம் வெளியிட திட்டமிட்டிருந்த நிலையில், தற்போது பிப்ரவரி மாதம் வெளியாக அதிக வாய்ப்பிருப்பதாகச் சொல்கிறார்கள். பிப்ரவரி 17 அல்லது 24-ம் தேதி படம் வெளியாகலாம் எனவும் அதிகாரப்பூர்வ வெளியீட்டுத் தேதி விரைவில் அறிவிக்கப்படும்.
வங்காள விரிகுடா எல்லையில் இருக்கக்கூடிய ஒரு கேங்க்ஸ்டராக 'ஜெயம்’ ரவி அங்கு எப்படி க்ரைம் பிசினஸை நடத்துகிறார் என்பதுதான் கதையின் ஒன்லைன். ப்ரியா பவானி ஷங்கர் போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடிக்கிறார். படத்தில் தான்யா ரவிச்சந்திரன் மற்றும் ஹரிஷ் உத்தமன் ஆகியோரும் நடிக்க, சாம் சி.எஸ் படத்திற்கு இசையமைக்கிறார்.