
அஜித்துடன் ஜோடியாக நடிக்க இருந்த நிலையில், நடிகை த்ரிஷாவின் இடத்தை நடிகை தமன்னா பிடித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
’துணிவு’ படத்தை அடுத்து நடிகர் அஜித் மகிழ் திருமேனி இயக்கத்தில் தனது அடுத்தப் படமான ‘விடாமுயற்சி’யை அறிவித்தார். ஆனால், படம் அறிவித்ததில் இருந்து இன்னும் அடுத்தக் கட்ட அப்டேட் எதுவும் படக்குழு தரப்பில் இருந்து கிடைக்கவில்லை. இந்நிலையில், படத்தில் அஜித்திற்கு கதாநாயகியாக த்ரிஷா நடிக்க இருப்பதாகவும் சொல்லப்பட்டது. ஆனால், இப்போது த்ரிஷாவுக்கு பதிலாக தமன்னா அந்த இடத்தைப் பிடித்துள்ளார்.
’லஸ்ட் ஸ்டோரிஸ்2’, ‘ஜெயிலர்’ படத்தின் ‘காவாலா’ பாடல் ஆகியவற்றிற்குப் பிறகு தமன்னா தற்போது டிரெண்டிங்கில் உள்ளார். இதனால், இந்த வாய்ப்பு தமன்னாவுக்கு போனதாகவும் சொல்லப்படுகிறது. படக்குழு இதை உறுதிப்படுத்தினால், ’வீரம்’ திரைப்படத்திற்குப் பிறகு கிட்டத்தட்ட ஒன்பது வருடங்களுக்குப் பின் அஜித்துடன் இணைந்து நடிப்பார் தமன்னா. ‘விடாமுயற்சி’ படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதத்தின் இறுதியில் தொடங்க இருக்கிறது.