அரசியலா, கல்யாண அறிவிப்பா?- பிரபல நடிகை புதிர் போஸ்ட்!

அரசியலா, கல்யாண அறிவிப்பா?-  பிரபல நடிகை புதிர் போஸ்ட்!

தமிழில், குத்து, கிரி, பொல்லாதவன், வாரணம் ஆயிரம், சிங்கம்புலி உட்பட சில படங்களில் நடித்தவர் கன்னட நடிகை ரம்யா என்ற திவ்யா ஸ்பந்தனா. இவர், சினிமாவை விட்டுவிட்டு காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். மாண்டியா தொகுதியில் போட்டியிட்டு எம்.பி ஆனார். இப்போது அரசியலில் இருந்து ஒதுங்கி இருக்கும் ரம்யா, மீண்டும் சினிமாவில் நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், இவர் இப்போது தனது சமூக வலைதளப்பக்கத்தில் புதிரான போஸ்ட் ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், ‘‘நாளை காலை 11.15 மணிக்கு மகிழ்ச்சியான செய்தியை உங்களுடன் பகிர்ந்துகொள்ள ஆவலாக இருக்கிறேன்’’ என்று தெரிவித்துள்ளார். இதனால் நெட்டிசன்கள் அவர் மீண்டும் அரசியலுக்கு வர இருக்கிறார் என்றும் சிலர் தனது திருமண அறிவிப்பை அவர் வெளியிட இருக்கிறார் என்றும் திரைப்பட அறிவிப்பாக இருக்கலாம் என்றும் கூறி வருகின்றனர்.

கடந்த மே மாதம் , தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இளைஞர் ஒருவருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை ரம்யா பதிவிட்டிருந்தார். அதைக் கண்ட ரசிகர்கள் அவர் யார் என்பதைத் தெரிந்து கொள்ள ஆர்வம் காட்டினர்.

அவர், கரண் ஜோஷி என்றும் ரம்யாவின் நெருங்கிய நண்பர் என்றும் இருவரும் காதலித்து வருவதாகவும் கன்னட சினிமாவில் கூறப்பட்டது. ஆனால், இதுபற்றி ரம்யா ஏதும் தெரிவிக்கவில்லை.

நடிகை ரம்யா, ஏற்கெனவே போர்ச்சுகல் நாட்டை சேர்ந்த தொழிலதிபர் ரபேல் என்பவரைக் காதலித்து வந்தார். கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in