பிரபல நடிகையின் சகோதரரை காதலிக்கும் விஜய் பட ஹீரோயின்!

பிரபல நடிகையின் சகோதரரை காதலிக்கும் விஜய் பட ஹீரோயின்!

பிரபல நடிகையின் சகோதரரை, விஜய் பட ஹீரோயின் காதலிப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.

பிரபல இந்தி நடிகை இலியானா டி குரூஸ். ஜோதிகிருஷ்ணா இயக்கிய ’கேடி’ படம் மூலம் தமிழுக்கு வந்தார். ஆனால் தமிழில் அதிக வாய்ப்பு கிடைக்கவில்லை. தெலுங்கில் முன்னணி நடிகையாக இருந்த அவர், பிறகு இந்திக்கு சென்றார். நீண்ட இடை வெளிக்குப் பிறகு தமிழில் விஜய் ஜோடியாக ’நண்பன்’ படத்தில் நடித்தார். இலியானாவுக்கும், ஆஸ்திரேலியாவை சேர்ந்த புகைப்படக் கலைஞர் ஆண்ட்ரூ நீபோன் என்பவருக்கும் காதல் மலர்ந்தது.

இருவரும் வெளிநாடுகளில் ஜோடியாகச் சுற்றினார்கள். ரகசிய திருமணம் செய்து கொண்டதாகவும் கூறப்பட்டது. இருவரும் அதை உறுதிப்படுத்த வில்லை. ஆனால் காதலருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து வெளியிட்டு வந்தார். பிறகு இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுப் பிரிந்தனர். இந்நிலையில் நடிகை இலியானா புதிய காதலில் விழுந்துள்ளார்.

நடிகை கேத்ரினா,  விக்கி கவுசல், நடிகை இலியானா, கேத்ரினாவின் சகோதரர் செபாஸ்டியன், ஆனந்த் திவாரி, மினி மாத்தூர்
நடிகை கேத்ரினா, விக்கி கவுசல், நடிகை இலியானா, கேத்ரினாவின் சகோதரர் செபாஸ்டியன், ஆனந்த் திவாரி, மினி மாத்தூர்

பிரபல பாலிவுட் நடிகை கேத்ரினா கைஃபின் சகோதரரும் லண்டனைச் சேர்ந்த மாடலுமான செபாஸ்டியன் லாரன்ட் மைக்கேலை (Sebastian Laurent Michel) அவர் காதலித்து வருவதாகக் கூறப்படுகிறது. நடிகை கேத்ரினா - நடிகர் விக்கி கவுசல் திருமணம் ராஜஸ்தானின் நடந்தபோது இருவரும் ஒன்றாக அங்கு சுற்றியதாகவும், அதே போல கேத்ரினாவின் மும்பை வீடு மற்றும் லண்டனில் அவர்கள் ஒன்றாக சுற்றியதாகவும், கடந்த 6 மாதமாக அவர்கள் காதலித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

நடிகை கேத்ரினா கைஃப், தனது பிறந்தநாளை மாலத்தீவில் நேற்று (ஜூலை 16) கொண்டாடினார். அந்தப் புகைப்படங்களை தனது சமூக வலைத்தளப்பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் கேத்ரினாவுடன், விக்கி கவுசல், நடிகை இலியானா, கேத்ரினாவின் சகோதரர் செபாஸ்டியன், ஆனந்த் திவாரி, மினி மாத்தூர் ஆகியோர் உள்ளனர். இதையடுத்தே கேத்ரினா, செபாஸ்டியன் காதல் பற்றிய செய்திகள் பாலிவுட்டில் பரபரப்பாகி வருகிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in