இளையராஜா தயாரிப்பில் நடிக்கிறாரா ரஜினிகாந்த்?

இளையராஜா தயாரிப்பில் நடிக்கிறாரா ரஜினிகாந்த்?
ரஜினிகாந்த்

நடிகர் ரஜினிகாந்த், இளையராஜா தயாரிக்கும் படத்தில் நடிக்க இருப்பதாக செய்திகள் பரவி வருகின்றன.

ரஜினிகாந்த் நடித்து நவம்பர் 4 ஆம் தேதி தீபாவளியை முன்னிட்டு வெளியான படம், ’அண்ணாத்த’. சிவா இயக்கி இருந்த இந்தப் படத்தில், நயன்தாரா, மீனா, குஷ்பு, கீர்த்தி சுரேஷ், ஜெகபதி பாபு, சூரி உட்பட பலர் நடித்திருந்தனர். வெற்றி ஒளிப்பதிவு செய்திருந்த இந்தப் படத்துக்கு டி.இமான் இசை அமைத்திருந்தார்.

ரஜினிகாந்த், இளையராஜா
ரஜினிகாந்த், இளையராஜா

சன் பிக்சர்ஸ் தயாரித்திருந்த இந்தப் படத்தை அடுத்து நடிகர் ரஜினிகாந்த் புதிய படத்துக்குத் தயாராகி விட்டதாகக் கூறப்படுகிறது. சில இயக்குநர்கள் அவரை இயக்கப் போவதாக ஏற்கெனவே செய்திகள் வெளியாகி வந்தன. இந்நிலையில், இளையராஜா, தனது பாவலர் கிரியேஷன்ஸ் சார்பில் தயாரிக்கும் படத்தில் ரஜினிகாந்த் நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.

ஆர்.பால்கி
ஆர்.பால்கி

இந்தப் படத்தை இந்திப் பட இயக்குநர் ஆர்.பால்கி இயக்க இருக்கிறாராம். இவர், அமிதாப் பச்சன் நடித்த ’பா’, அமிதாப் பச்சனுடன் தனுஷ் நடித்த ’ஷமிதாப்’, அக்‌ஷய்குமார் நடித்து வரவேற்பைப் பெற்ற ’பேட்மேன்’ படங்களை இயக்கியவர். ரஜினியின் 169-வது படமான இதை, பான் இந்தியா படமாகத் தயாரித்து தமிழ், இந்தி, தெலுங்கு உட்பட பல்வேறு மொழிகளில் வெளியிடவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக சினிமா வட்டாரத்தில் கூறப்படுகிறது.

Related Stories

No stories found.