கமல்ஹாசன் தயாரிப்பில் உதயநிதி கதாநாயகனாக நடிக்கும் படத்தின் இயக்குநர் இவர் தானா?

கமல்ஹாசன் தயாரிப்பில் உதயநிதி கதாநாயகனாக நடிக்கும் படத்தின் இயக்குநர் இவர் தானா?

கமல்ஹாசனின் ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பின் கீழ் உதயநிதி ஸ்டாலின் 'ஆர்கேஎஃப் 54' படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தை பிரசாந்த் முருகேசன் இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கமல்ஹாசன் நடிப்பில் வெளியான 'விக்ரம் 2' மாபெரும் வெற்றியைப் பெற்றுள்ளது. இந்த வெற்றியைத் தொடர்ந்து தனது ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் பேனரின் கீழ் படங்களைத் தயாரிக்கும் பணியில் கமல்ஹாசன் ஈடுபட்டுள்ளார். சிவகார்த்திகேயன்-சாய் பல்லவி இணைந்து நடிக்கும் 'எஸ்கே21' என்கிற 'ஆர்கேஎஃப் 51' படத்தை தயாரிக்கிறார்.

இதே போல உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் 'ஆர்கேஎஃப் 54' என்ற படத்தையும் கமல்ஹாசன் தயாரிக்கிறார். இந்த படத்தை இயக்குநர் பிரசாந்த் முருகேசன் இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் சசிகுமார் நடித்த 'கிடாரி' என்ற வெற்றிப் படத்தை இயக்கியவர் தான் பிரசாந்த் முருகேசன். அதனைத் தொடர்ந்து நடிகை ரம்யா கிருஷ்ணனை வைத்து 'குயின்' என்கிற வெப் தொடரை இயக்கி, அதுவும் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த வெப் தொடர் கவுதம் வாசுதேவ் மேனன் தயாரிப்பில் உருவாக்கப்பட்டது.

தற்போது உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவாகும் இப்படத்தை அவர் இயக்க உள்ளதாவும், மற்ற நடிகர், நடிகைகள் விவரம் விரைவில் வெளியாக உள்ளதாக தெரிகிறது. உதயநிதி ஸ்டாலின் தற்போது மாரி செல்வராஜ் இயக்கத்தில் 'மாமன்னன்' மற்றும் மகிழ் திருமேனி இயக்கத்தில் 'கழக தலைவன்' ஆகிய படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in