2வது மனைவியையும் கழட்டி விடப்போகிறாரா?: பிரபல இயக்குநரின் ட்விட்டால் ரசிகர்கள் கேள்வி

இயக்குநர் செல்வராகவன்
இயக்குநர் செல்வராகவன்

இயக்குநரும், நடிகருமான செல்வராகவன் பதிவிட்டுள்ள ட்விட் அவர் இரண்டாவது மனைவியையும் விவகாரத்து செய்யப்போகிறாரா என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

இயக்குநர் கஸ்தூரி ராஜாவின் மகனும், நடிகர் தனுஷின் அண்ணனுமான செல்வராகவன் 'துள்ளுவதோ இளமை' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். 'காதல் கொண்டேன்', '7 ஜி ரெயின்போ காலனி', 'புதுப்பேட்டை', 'ஆயிரத்தில் ஒருவன்', 'மயக்கம் என்ன', 'இரண்டாம் உலகம்', 'நெஞ்சம் மறப்பதில்லை',' என்ஜிகே' போன்ற படங்களை இயக்கியுள்ளார்.

இவர் இயக்கிய படங்களில் நடித்த சோனியா அகர்வாலை கடந்த 2006-ம் ஆண்டு செல்வராகவன் திருமணம் செய்து கொண்டாம். ஆனால், சில ஆண்டுகளிலேயே அவர்கள் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதன் காரணமாக இருவரும் விவகாரத்து செய்து கொண்டனர். இயக்குநரான செல்வராகவன் 'பகாசூரன்', 'பீஸ்ட்' ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

இந்த நிலையில், தன்னிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய கீதாஞ்சலி என்பவரை செல்வராகவன் மறுமணம் செய்து கொண்டார். அடிக்கடி ட்விட்டரில் செல்வராகவன் கருத்துக்களைப் பதிவிட்டு வருகிறார். அப்படி ஒரு பதிவு தான் அவர் இரண்டாவது மனைவியையும் விவகாரத்து செய்யப்போகிறாரா என்று அவரது ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

அந்த பதிவில், "தனியாகத்தான் வந்தோம். தனியாகத்தான் போவோம். நடுவில் என்ன துணை வேண்டி கிடக்கிறது ? துணை என்பது கானல் நீர். நெருங்க நெருங்க தூரம் ஓடும்" என பதிவிட்டுள்ளார். இந்த ட்விட் தான் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in