விஜய் படத்தை இயக்குகிறேனா?- அவசரமாக மறுத்த 'டான்' இயக்குநர்

விஜய் படத்தை இயக்குகிறேனா?- அவசரமாக மறுத்த 'டான்' இயக்குநர்

விஜய் நடிக்கும் படத்தை இயக்கப் போவதாக வந்த தகவலை ’டான்’ இயக்குநர் மறுத்தார்.

சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடித்த படம், ’டான்’. பிரியங்கா அருள் மோகன் அவர் ஜோடியாக நடித்திருந்தார். சமுத்திரக்கனி, எஸ்.ஜே.சூர்யா, சூரி, முனீஸ்காந்த், காளி வெங்கட், ஷிவாங்கி உள்பட பலர் நடித்த இந்தப் படம் வரவேற்பைப் பெற்றது.

லைகா நிறுவனம் மற்றும் சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ் இணைந்து தயாரித்த இந்தப் படத்தை சிபி சக்கரவர்த்தி இயக்கி இருந்தார். இவர், இயக்குநர் அட்லியிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர்.

விஜய், ரஜினிகாந்துடன் சிபி சக்கரவர்த்தி
விஜய், ரஜினிகாந்துடன் சிபி சக்கரவர்த்தி

இந்தப் படம் வரவேற்பைப் பெற்றதை அடுத்து, நடிகர் ரஜினி காந்த், சிவகார்த்திகேயன், இயக்குநர் சிபி சக்கரவர்த்தி உட்பட படக்குழுவை பாராட்டி இருந்தார். இந்நிலையில், சிபி சக்கரவர்த்தி, நடிகர் விஜய் அல்லது ரஜினிகாந்த் நடிக்கும் படத்தை இயக்கப் போவதாகச் செய்திகள் வெளியானது.

இதுபற்றி இயக்குநர் சிபி சக்கரவர்த்தியிடம் கேட்டபோது மறுத்தார். ’’இந்த தகவல்கள் எனக்கே புதிதாக இருக்கிறது. இப்போது ஸ்கிரிப்ட் வேலைகளில்தான் இருக்கிறேன். அது முடிந்த பிறகுதான், யார் நடிக்கப் போகிறார்கள் என்பது தெரியும்’’ என்றார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in