தல அஜித்தின் 'துணிவு' படத்திற்குப் பிறகு உலக நாயகனுடன் இணையும் ஹெச். வினோத்?

தல அஜித்தின் 'துணிவு' படத்திற்குப் பிறகு உலக நாயகனுடன் இணையும் ஹெச். வினோத்?

‘துணிவு’ படத்திற்குப் பிறகு இயக்குநர் ஹெச்.வினோத், நடிகர் கமல்ஹாசனுடன் இணைய இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

‘விக்ரம்’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் கமல்ஹாசன் தற்போது ‘இந்தியன்2’ படத்தில் ஷங்கர் இயக்கத்தில் நடித்து வருகிறார். மேலும் பிக்பாஸ் 6வது சீசனிலும் பிஸியாக இருக்கிறார். கடந்த செப்டம்பர் மாதம் மீண்டும் தொடங்கப்பட்ட ’இந்தியன்2’ படப்பிடிப்பு நிறைவடைந்ததும் நடிகர் கமல்ஹாசன் இயக்குநர் ஹெச். வினோத்துடன் இணைவார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் கமல்ஹாசனின் சொந்தத் தயாரிப்பு நிறுவனமாக ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல் தயாரிப்பில் இந்தப் படத்தின் படம் அடுத்த வருடம் முதல் பாதியில் தொடங்க அதிக வாய்ப்புள்ளதாகவும் தெரிகிறது.

இயக்குநர் வினோத் தற்போது அடுத்த வருடம் பொங்கலுக்கு வெளியாக இருக்கும் ‘துணிவு’ படப் பணிகளில் பிஸியாக இருக்கிறார். கமல்ஹாசன் நடித்து வரும் ‘இந்தியன்2’ படப்பிடிப்பு இன்னும் இரண்டு மாதங்களில் முடிவடைந்து விடும். இதற்கடுத்தே, வினோத் நடிர் கமல்ஹாசனுக்காக திரைக்கதைப் பணியைத் தொடங்குவார்.

அதேபோல, இயக்குநர் லோகேஷ் கனகராஜூம் அடுத்து ‘தளபதி 67’, ‘கைதி 2’ படங்களில் பிஸியாகி விடுவார். இதற்கடுத்தே கமல்ஹாசன் - லோகேஷ் கூட்டணியில் ‘விக்ரம் 3’ தொடங்கும். அதேபோல, ‘விக்ரம்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவின் போது இயக்குநர் பா.ரஞ்சித் நடிகர் கமல்ஹாசனுடன் படத்திற்காக இணைவதாக அறிவித்தார். அவர் தற்போது விக்ரமுடன் ‘தங்கலான்’ படத்தில் பிஸி. இந்தக் கூட்டணி படம் தொடங்க எப்படியும் இன்னும் ஒரு வருடமாகும் என்கிறது கோலிவுட் வட்டாரம்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in