பிரபல தெலுங்கு ஹீரோவை இயக்குகிறாரா ஹரி?

பிரபல தெலுங்கு ஹீரோவை இயக்குகிறாரா ஹரி?

இயக்குநர் ஹரி, நேரடி தெலுங்கு படத்தை இயக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.

பிரபல இயக்குநர் ஹரி இப்போது அருண் விஜய் நடிக்கும் ’யானை’ படத்தை இயக்கியுள்ளார். இதில் பிரியா பவானி சங்கர் நாயகியாக நடித்துள்ளார். சமுத்திரகனி, ராமச்சந்திர ராஜூ, யோகிபாபு, அம்மு அபிராமி உட்பட பலர் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் இசை அமைக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள் நடந்து வருகின்றன.

கோபிசந்த்
கோபிசந்த்

இயக்குநர் ஹரியின் திரைப்படங்கள் தெலுங்கில் டப் ஆகி வெளியாவது உண்டு. அவருடைய ஆக்‌ஷன் படங்களுக்கு அங்கு ரசிகர்கள் அதிகம். இதனால் அவர் நேரடி தெலுங்கு படத்தை இயக்க இருப்பதாகச் செய்திகள் வெளியாயின. சில வருடங்களுக்கு முன் அவர் ஜூனியர் என்.டி.ஆர் நடிக்கும் படத்தை இயக்க இருப்பதாகக் கூறப்பட்டது. ஆனால், அதை ஹரி மறுத்திருந்தார்.

இந்நிலையில், தெலுங்கு நடிகர் கோபிசந்த் நடிக்கும் படத்தை அவர் இயக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. கிராமத்து ஆக்‌ஷன் கதை ஒன்றை அவருக்கு இயக்குநர் ஹரி சொன்னதாகவும் அதில் நடிக்க கோபிசந்த் ஒப்புக்கொண்டதாகவும் கூறப்படுகிறது. இதை இயக்கு நர் ஹரியோ, நடிகர் கோபிசந்தோ உறுதிப்படுத்தவில்லை.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in