`பொன்னியின் செல்வன்2’ படத்தில் பின்னணிப் பாடகி சித்ரா?

பாடகி சித்ரா
பாடகி சித்ரா`பொன்னியின் செல்வன்2’ படத்தில் பின்னணிப் பாடகி சித்ரா?

பின்னணிப் பாடகி சித்ரா ‘பொன்னியின் செல்வன்2’ படத்தில் பாடி இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

மணிரத்னம் இயக்கத்தில் நடிகர்கள் ‘ஜெயம்’ ரவி, த்ரிஷா, கார்த்தி, விக்ரம், ஐஷ்வர்யாராய் உள்ளிட்டப் பலர் நடிப்பில் ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தின் முதல் பாகம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாத இறுதியில் வெளியானது. முதல் பாகம் வெற்றிப் பெற்றதை அடுத்து இதன் இரண்டாம் பாகம் வருகிற ஏப்ரல் மாதம் 28-ம் தேதி வெளியாக இருப்பதைப் படக்குழு அறிவித்துள்ளது. இதற்கான புரோமோஷன் பணிகளை படக்குழு தற்போது தொடங்கி உள்ளது. விரைவில் இதன் இசை வெளியீட்டு விழாவும் நடைபெற உள்ளது.

முதல் பாகம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வெற்றிப் பெற்றதால் இரண்டாம் பாகத்திற்கும் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் முதல் பாகத்தின் பாடல்களும் வெற்றிப் பெற்றது. இந்த நிலையில், ‘பொன்னியின் செல்வன்’ படத்தின் இரண்டாம் பாகத்தில் பின்னணிப் பாடகி சித்ரா பாடல் பாடி இருப்பதாக வீடியோ ஒன்று வெளியாகி இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் சித்ரா மீண்டும் ஒருமுறை பாடி இருப்பதைக் கேட்க ரசிகர்கள் ஆர்வமுடன் இருப்பதையும் பகிர்ந்து வருகின்றனர். இதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கலாம்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in