இன்ஸ்டாவில் கணவர் பெயரை நீக்கினார் சிரஞ்சீவி மகள்: ரசிகர்கள் குழப்பம்

இன்ஸ்டாவில் கணவர் பெயரை நீக்கினார் சிரஞ்சீவி மகள்: ரசிகர்கள் குழப்பம்

நடிகர் சிரஞ்சீவி மகள், தனது சமூக வலைதளப் பக்கத்தில், கணவர் பெயரை நீக்கியதால் அவர் விவாகரத்து செய்ய இருப்பதாகச் செய்திகள் பரவி வருகின்றன.

தெலுங்கு திரை நட்சத்திரம் சிரஞ்சீவிக்கு சுஷ்மிதா, ஸ்ரீஜா ஆகிய மகள்களும் ராம் சரண் என்ற மகனும் உள்ளனர். ராம்சரண் தெலுங்கு சினிமாவில் ஹீரோவாக நடித்து வருகிறார். படங்களையும் தயாரித்து வருகிறார். இதில் ஸ்ரீஜா, கடந்த 2007-ம் ஆண்டு, சிரிஸ் பரத்வாஜ் என்பவரைக் காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு நிவ்ரிதி என்ற பெண் குழந்தை உள்ளது. பின்னர், கடந்த 2011-ம் ஆண்டு இருவரும் விவாகரத்து செய்தனர்.

இதையடுத்து, தனது குழந்தையுடன் சிரஞ்சீவி வீட்டில் வசித்து வந்தார் ஸ்ரீஜா. பின்னர், 2016-ம் ஆண்டு தனது சிறு வயது நண்பரும் நடிகருமான கல்யாண் தேவை திருமணம் செய்துகொண்டார். இவர்கள் திருமணம் பெங்களூருவில் நடந்தது. இவர்களுக்கு நவிஸ்கா என்ற பெண் குழந்தை உள்ளது.

திருமணத்துக்குப் பிறகு, சமூக வலைதளத்தில் ‘ஸ்ரீஜா கல்யாண்’ என்று தன் பெயரை மாற்றிக்கொண்டு, புகைப்படங்களைப் பதிவிட்டு வந்தார். இந்நிலையில் அவர் தனது பெயரில் இருந்து திடீரென கல்யாணை நீக்கிவிட்டு, ‘ஸ்ரீஜா கோனிடெலா’ என்று மாற்றியுள்ளார்.

இதனால், குழப்பமடைந்த ரசிகர்கள், நடிகை சமந்தாவும் முதலில் இப்படித்தான் பெயரை மாற்றினார். அவரைப் போலவே இருவரும் கணவரைப் பிரிகிறார் என்று கூறி வருகின்றனர். ஆனால், சிரஞ்சீவி குடும்பத்தினர் இதுபற்றி ஏதும் சொல்லவில்லை.

நடிகர் தனுஷ் - ஐஸ்வர்யா ஜோடி 18 வருட திருமண பந்தத்தில் இருந்து பிரிவதாக அறிவித்துள்ள நிலையில், சிரஞ்சீவி மகளின் பெயர் மாற்றமும் சினிமா உலகில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in