பணத்திற்கு வழியில்லாமல் பாரதிராஜா தவிக்கிறாரா?: மகன் மனோஜ் மனம்திறந்த பேட்டி

பணத்திற்கு வழியில்லாமல் பாரதிராஜா தவிக்கிறாரா?: மகன் மனோஜ் மனம்திறந்த பேட்டி

இயக்குநர் பாரதிராஜா பணத்திற்கு வழி இல்லாமல் மருத்துவமனையில் இருப்பதாக தவறான தகவல் வெளியாகி வருகிறது. தயவுசெய்து அதுபோன்ற தகவல்களை யாரும் பரப்ப வேண்டாம் என அவரின் மகன் மனோஜ் கேட்டுக் கொண்டுள்ளார்.

இயக்குநர் இமயம் பாரதிராஜா உடல்நலக்குறைவு காரணமாக சென்னை அரும்பாக்கத்தில் உள்ள எம்ஜிஆர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் குணமடைந்து அவர் வீடு திரும்ப உள்ளார், முன்னதாக அவருக்கு சிகிச்சை வழங்கிய மருத்துவர்கள் மற்றும் அவரது மகன் மனோஜ் ஆகியோர் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.

அப்போது மனோஜ் கூறியதாவது: எனது அப்பா பாரதிராஜாவின் உடல்நிலை நன்றாக உள்ளது, ஆரோக்கியமாக இருக்கிறார், மீண்டும் நீங்கள் பழைய பாரதிராஜாவைப் பார்க்கும் அளவிற்கு அவர் உடல்நலம் தேறி உள்ளது.

இதுக்கிடையில், ஏதோ அவர் பணத்திற்கு வழி இல்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக தவறான தகவல்கள் பரப்பப்பட்டு வருகிறது. தயவுசெய்து அதுபோன்ற தகவல்களைப் பரப்ப வேண்டாம். என்னுடைய சொந்த பணத்தில் அவருக்கு சிகிச்சை அளித்து வருகிறோம்.

பாரதிராஜா இப்போது படப்பிடிப்புக்கு செல்ல வேண்டும் என ஆசைப்படுகிறார், எல்லாமே அவருக்கு சினிமா தான். சினிமாதான் அவருடைய மூச்சு சுவாசம் எல்லாம், அவரது உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில் நான்கைந்து படங்களின் படப்பிடிப்புகள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் திரைப்பிரபலங்கள் நிறைய பேர் நேரில் வந்து அவரைச் சந்தித்தனர். அவர் சிகிச்சையில் இருந்தபோதே அவர் நடித்த படங்கள் எல்லாம் போட்டுக் காட்டினார். மீண்டும் 'திருச்சிற்றம்பலம்' படம் பார்க்க வேண்டும் என அவர் கேட்டார். விரைவில் குணமடைந்து அவர் அனைவரையும் சந்திக்க உள்ளார் என்றார்,

அதைத் தொடர்ந்து பாரதிராஜாவிற்குகு சிகிச்சை அளித்த மருத்துவர் சுவாமிக்கண்ணு மற்றும் சபாநாயகம் கூறுகையில், " இயக்குநர் பாரதிராஜா நுரையீரல் கடுமையாக பாதிக்கப்பட்டு மருத்துவனைக்கு வந்தார். தற்போது அவர் முழுகுணம் அடைந்திருக்கிறார். இன்று மாலை மருத்துவமனையில் இருந்து வீடு திரும்புகிறார், தொடர் பரிசோதனை மட்டும் தேவைப்படுகிறது.

மீண்டும் ஐந்து நாட்கள் கழித்து அவர் பரிசோதனைக்கு வரவேண்டும். வயது முதிர்வு காரணமாக அவருக்கு நுரையீரல் பாதிப்பு ஏற்பட்டது. தற்போது அதுவம் சரி செய்யப்பட்டுள்ளது. அவர் சிகிச்சைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கியதால் விரைவில் குணம் அடைந்துள்ளார்" என்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in