கார்த்தியை இயக்குகிறாரா அருண்ராஜா காமராஜ்?

கார்த்தியை இயக்குகிறாரா அருண்ராஜா காமராஜ்?

சத்யராஜ், ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த ’கனா’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் அருண்ராஜா காமராஜ். அதற்கு முன் நடிகராகவும் பாடலாசிரியராகவும் இயங்கி வந்தார். 'கனா' படத்தை அடுத்து உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள ’நெஞ்சுக்கு நீதி’ படத்தை இயக்கியுள்ளார்.

இந்தப் படம் கடந்த வெள்ளிக்கிழமை வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்தியில் வெற்றிப் பெற்ற ’ஆர்டிகிள் 15’ படத்தின் ரீமேக்கான இந்தப் படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இதன் மூலம் கவனிக்கத்தக்க இயக்குநராகி இருக்கிறார் அருண்ராஜா காமராஜ்.

இதையடுத்து அவர் கார்த்தி நடிக்கும் படத்தை இயக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்தப் படம் குறித்த பேச்சுவார்த்தை முடிந்துவிட்டதாகவும் விரைவில் இந்தப் படம் பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in