அப்பாவை இயக்குகிறாரா ஐஸ்வர்யா ரஜினிகாந்த்?

அப்பாவை இயக்குகிறாரா ஐஸ்வர்யா ரஜினிகாந்த்?

நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் அடுத்த படத்தை அவரது மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கப் போவதாக தகவல் பரவியுள்ளது.

நடிகர் ரஜினிகாந்த் தற்போது நெல்சன் இயக்கத்தில் 'ஜெயிலர்' படத்தில் நடித்து வருகிறார். கடந்த ஆண்டு அவர் நடித்த 'அண்ணாத்த', அதற்கு முன் நடித்த 'தர்பார் படங்கள் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை.

இந்நிலையில் இப்போது அவர் தன்னுடைய 169-வது படமாக நெல்சன் இயக்கத்தில் 'ஜெயிலர்' படத்தில் நடித்து வருகிறார்.இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. அண்ணாத்த படத்தின் தோல்வியால் இந்த படத்துக்கு ரஜினிக்கு சம்பளம் கணிசமாகக் குறைத்துள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இந்த படத்துக்கு பிறகு ரஜினிகாந்த் அடுத்து 'டான்' படத்தின் இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. ஆனால் அதற்கிடையில் தன்னுடைய மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் படத்தில் ஒரு கௌரவ வேடத்தில் ரஜினிகாந்த் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஏற்கெனவே தனுஷ் நடித்த 3, கௌதம் கார்த்திக் நடித்த வை ராஜா வை ஆகிய படங்களை இயக்கியுள்ளார். தற்போது மூன்றாவதாக படத்தை இயக்க ஆயத்தமாகி வருகிறார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in