ரவீந்தர் திருமணத்தை கிண்டல் செய்தேனா?- என்ன சொல்கிறார் நடிகை வனிதா

ரவீந்தர் திருமணத்தை கிண்டல் செய்தேனா?- என்ன சொல்கிறார் நடிகை வனிதா

தயாரிப்பாளர் ரவீந்தர் திருமணத்தைத் தாக்கி வனிதா ட்விட் செய்திருக்கிறாரா என்பதற்கு வனிதா விளக்கம் கொடுத்துள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு தயாரிப்பாளர் ரவீந்தர் மற்றும் சின்னத்திரை நடிகை மஹாலட்சுமி இருவருக்கும் திருமணம் நடந்தது. சிலர் இவர்களது திருமணத்திற்கு வாழ்த்து தெரிவித்திருந்த நிலையில், பலர் இவர்களது உருவத்தை வைத்து கிண்டல் செய்ததும் இணையத்தில் அதிகம் பார்க்க முடிந்தது.

இந்நிலையில், நடிகை வனிதா விஜயகுமார் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், ’யாருடைய வாழ்க்கையையும் நினைத்து வருத்தப்பட நேரம் இல்லாத அளவுக்கு இப்போது என் வாழ்க்கை பிஸியாக உள்ளது. கர்மா எல்லாருக்கும் கண்டிப்பாக நடக்கும். அதை நான் உறுதியாக நம்புகிறேன்’ என தெரிவித்துள்ளார்.

இதனை அடுத்து வனிதா இந்த ட்வீட்டை ரவீந்தருக்காகத் தான் போட்டிருக்கிறார் என கூறி வந்தனர். ஏனெனில், வனிதா கடந்த வருடம் பீட்டர்பாலை திருமணம் செய்த போது ரவீந்தர் கடுமையாக விமர்சித்து இருந்தார்.

இந்த ட்வீட் குறித்து வனிதா தன்னுடைய சமீபத்திய பேட்டி ஒன்றில், ``நான் யாரையும் தனிப்பட்ட முறையில் இங்குக் குறிப்பிடவில்லை. பலருக்கும் 40 வயதிற்கு மேல் தான் வாழ்க்கையே ஆரம்பிக்கும். அந்த வகையில் என்னுடைய வாழ்க்கையிலும் சில விஷயங்கள் நடந்தது.

அப்படி என் வாழ்க்கையில் ஒன்றாக நடந்த நான்கைந்து விஷயங்களுக்கும் சேர்த்துதான் அப்படி ஒரு ட்வீட்டை பகிர்ந்திருந்தேன். இதற்கு எல்லாரும் சமூக வலைதளங்களில் பதிலளித்து கொண்டிருக்கிறார்கள். அவரவர் கமென்ட் செக்‌ஷனை ஆஃப் செய்து விட்டு போக வேண்டியது தானே!'' என கூறியிருந்தார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in