தேசிய கட்சியில் இணைகிறாரா நடிகை த்ரிஷா?: சினிமா வட்டாரத்தில் பரபரப்பு

தேசிய கட்சியில் இணைகிறாரா நடிகை த்ரிஷா?: சினிமா வட்டாரத்தில் பரபரப்பு

பிரபல நடிகையான த்ரிஷா விரைவில் அரசியல் பயணத்தைத் தொடங்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

தமிழின் முன்னணி நடிகையான த்ரிஷா மலையாளம், தெலுங்கு., கன்னடம் உள்ளிட்ட பல்வேறு மொழிப்படங்களில் நடித்து வருகிறார். 40 வயதை நெருங்கினாலும் சினிமாவில் மார்க்கெட் இழக்காமல் பல முன்னணி ஹீரோக்களுடன் அவர் நடித்து வருகிறார்.

இயக்குநர் மணிரத்னம் இயக்கிய 'பொன்னியின் செல்வன்' படத்தில் குந்தவையாக நடித்துள்ளார். இப்படம் ஆக.30-ம் தேதி திரைக்கு வர உள்ளது. தற்போது 'ராங்கி', 'கர்ஜனை' உள்பட பல தமிழ் படங்களிலும், மலையாளத்தில் மோகன்லாலுக்கு ஜோடியாக' ராம்' , தெலுங்கில் 'பிருந்தா' என்கிற வெப்தொடரிலும் நடித்து வருகிறார். லோகோஷ் கனகராஜ் இயக்கும் 'தளபதி 67' படத்தில் நடிகர் விஜய்க்கு அவர் ஜோடியாக நடித்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், இவர் அரசியலில் இணைய திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தேசிய கட்சியான காங்கிரஸில் இணைந்து அரசியல் பயணத்தைத் தொடங்க உள்ளார் என்று சினிமா வட்டாரங்களில் செய்தி பரபரக்கிறது.
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா போல அரசியலில் மிளிர வேண்டும் என்ற ஆசையில் த்ரிஷா இந்த முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் சினிமாவில் தொடர்ந்து நடிப்பாரா அல்லது சினிமாவிற்கு குட்பை சொல்வரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. ஆனால், அரசியலில் சேர்வது குறித்து த்ரிஷா தரப்பில் இருந்து இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in