சினிமாவில் நடிக்கப் போகிறாரா நடிகை ரோஜாவின் மகள்?- என்ன சொல்கிறார் ஆர்.கே.செல்வமணி

சினிமாவில் நடிக்கப் போகிறாரா நடிகை ரோஜாவின் மகள்?- என்ன சொல்கிறார் ஆர்.கே.செல்வமணி

நடிகை ரோஜா- ஆர்.கே.செல்வமணியின் மகளான அன்ஷுமாலிகா தமிழ் சினிமாவில் அறிமுகமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நடிகையும் ஆந்திரா அமைச்சருமான ரோஜா- இயக்குநர் ஆர்.கே.செல்வமணியின் மகள் அன்ஷுமாலிகா. இவர் தற்போது அமெரிக்காவில் படித்து வருகிறார். இதனிடையே, அன்ஷுமாலிகா, நடிகர் விக்ரமின் மகன் துருவ் விக்ரமிற்கு ஜோடியாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியானது.

இதனை மறுத்துள்ள இயக்குநர் ஆர்.கே.செல்வமணி, "மேற்படிப்பு படிக்க வேண்டும் என்ற மகள் அன்ஷுமாலிகாவின் எண்ணத்தை நிறைவேற்றி வைத்தோம். தற்போது, அவர் பாஸ்டன் பல்கலைக்கழகத்தில் கம்ப்யூட்டர் சயின்ஸ் படிப்பதற்காக அமெரிக்கா சென்றுள்ளார். நான்கு ஆண்டுகள் அவர் அமெரிக்காவில் இருப்பார். இந்நிலையில், அவர் படத்தில் நடிக்கப் போகிறார், இந்த ஹீரோவுக்கு ஹீரோயினாக அறிமுகம் ஆகப்போகிறார் என்பதெல்லாம் வதந்தி" என்று தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in