'லியோ’ ப்ரீ ரிலீஸ் நிகழ்வில் பங்கேற்கும் விஜய்?

’லியோ’ விஜய்
’லியோ’ விஜய்

'லியோ’ திரைப்படத்தின் ப்ரீ ரிலீஸ் ஈவண்ட் துபாயில் நடக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

’லியோ’ படத்தின் இசை வெளியீட்டு விழா கேன்சல் ஆன நிலையில், அதை விட பிரம்மாண்டமாக ப்ரீ ரிலீஸ் ஈவண்ட் ஒன்றை துபாயில் படக்குழு நடத்தத் திட்டமிட்டுள்ளதாக படத்தின் தயாரிப்பாளர் லலித் தெரிவித்துள்ளார். இந்தப் படத்தின் ப்ரீ-ரிலீஸ் நிகழ்ச்சி வரும் அக்டோபர் 12ஆம் தேதி துபாயில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக படக்குழு சார்பில் கூறப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் மற்றும் இசையமைப்பாளர் அனிருத் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

நடிகர் விஜய்
நடிகர் விஜய்

நிகழ்ச்சியில் நடிகர் விஜய் நேரடியாக பகேற்கவில்லை என்றபோதிலும், அவரின் இரண்டு நிமிட வீடியோ இந்த நிகழ்ச்சியில் திரையிடப்பட உள்ளதாகவும், இந்த வீடியோவில் படம் குறித்து மட்டுமே விஜய் பேசவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்தத் தகவல் ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in