ஐஸ்வர்யா ராயை இன்ஸ்டாகிராமில் அன்ஃபாலோ செய்தாரா அமிதாப்... சந்தேகம் கிளப்பும் ரசிகர்கள்!

அமிதாப் பச்சன், ஐஸ்வர்யா ராய்
அமிதாப் பச்சன், ஐஸ்வர்யா ராய்

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகை ஐஸ்வர்யா ராயை அவரது மாமனாரும் நடிகருமான அமிதாப் பச்சன் பின் தொடரவில்லை. இதை வைத்து அபிஷேக்-ஐஸ்வர்யா ராய் பிரிவு உறுதிதானா என்ற சந்தேகத்தை கிளப்பி வருகின்றனர் ரசிகர்கள்.

ஐஸ்வர்யா ராய்
ஐஸ்வர்யா ராய்

பாலிவுட்டில் சல்மான் கான், அமீர் கான் என பல முன்னணி நடிகர்களுடனும் ஜோடி போட்ட ஐஸ்வர்யா ராய்க்கும் பாலிவுட் பாட்ஷா அமிதாப்பின் மகனும் நடிகருமான அபிஷேக் பச்சனுக்கும் கடந்த 2007-ம் ஆண்டு திருமணம் நடந்தது. ஐஸ்வர்யா ராயை திருமணம் செய்ததிலிருந்து அவர்களது திருமண மோதிரம் இல்லாமல் அபிஷேக் பச்சன் பொது வெளிக்கு வந்ததில்லை. ஆனால், சமீபத்தில் அவர் கலந்துகொண்ட நிகழ்ச்சி ஒன்றில் அந்த மோதிரம் இல்லாமல் வந்தார். இதனைப் பார்த்த பலரும் அபிஷேக் கையில் மோதிரம் இல்லை. எனவே அவருக்கும் ஐஸ்வர்யா ராய்க்கும் சண்டையா, பிரியப் போகிறார்களா என்ற சந்தேகத்தை எழுப்பி வருகின்றனர்.

ஐஸ்வர்யா ராய், அபிஷேக் பச்சன்...
ஐஸ்வர்யா ராய், அபிஷேக் பச்சன்...

ஆனால், இந்தத் தகவல் இணையத்தில் பரவிய சமயத்தில்தான் நடிகர் அபிஷேக்கின் அக்கா ஸ்வேதா பச்சனின் மகன் அகஸ்திய நந்தா அறிமுகமாகும் 'த ஆர்ச்சிஸ்' படத்தின் பீரிமியர் ஷோவில் எடுக்கப்பட்ட வீடியோவில் ஐஸ்வர்யா ராய் குடும்பத்துடன் பங்கேற்று இருக்கிறார். இந்த நிலையில், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அமிதாப் பச்சன், ஐஸ்வர்யா ராயை பின் தொடர்வதை நிறுத்திவிட்டார் என்பதை ரசிகர்கள் வைரலாகப் பகிர்ந்து வருகின்றனர். அபிஷேக் பச்சன், அலியா பட், தீபிகா படுகோனே, கத்ரீனா கைஃப் உள்ளிட்ட 74 பேரைத்தான் பின் தொடர்கிறார் அமிதாப். அதேபோல, ஐஸ்வர்யாவும் அமிதாப்பை பின் தொடரவில்லை. தனது கணவர் அபிஷேக்கை மட்டும்தான் பின் தொடர்கிறார்.

இந்த ஒரு விஷயமும் ரசிகர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒருவேளை அமிதாப்பும் ஐஸ்வர்யாவும் ஆரம்பத்தில் இருந்தே ஒருவரை ஒருவர் பின் தொடரவில்லையா எனவும் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். ஆனால், இந்த விவாகரத்து செய்திகள் குறித்து ஐஸ்வர்யா-அபிஷேக் எதுவும் விளக்கம் கொடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் வாசிக்கலாமே...

இன்று முதல் பெண்களுக்கு இலவசம்... நடைமுறைக்கு வந்தது ‘மகாலட்சுமி’ திட்டம்!

சோகம்... `முண்டாசுப்பட்டி’ படப்புகழ் நடிகர் காலமானார்!

நடிகர் விஜயகாந்துக்கு மீண்டும் தீவிர சிகிச்சை... ரசிகர்கள் அதிர்ச்சி!

இன்று தமிழகம் முழுவதும் 3000 இடங்களில் மருத்துவ முகாம்கள்!

ப்பா... ஜம்ப் சூட்டில் சூடேற்றும் அலியா பட்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in