‘தமிழோடு பறக்கத் தயாராகிறேன்!' - கேன்ஸ் விழாவை எதிர்நோக்கும் பார்த்திபன்

‘தமிழோடு பறக்கத் தயாராகிறேன்!' - கேன்ஸ் விழாவை எதிர்நோக்கும் பார்த்திபன்

‘ஒத்த செருப்பு' படத்திற்குப் பின், 'இரவின் நிழல்' என்ற படத்தை இயக்கியுள்ளார் ஆர்.பார்த்திபன். ‘ஒத்த செருப்பு' படத்தில் ஒரே ஒரு கதாபாத்திரம் மட்டுமே இடம் பெற்றிருந்தைப் போல 'இரவின் நிழல்' படம் 'சிங்கிள் ஷாட்'டில் எடுக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் பார்த்திபனுடன் வரலட்சுமி சரத்குமார், அனந்த கிருஷ்ணன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஏ.ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

இந்தப் படத்தின் பாடல் வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் நடந்தது. இதில் மைக்கை தூக்கி வீசி பரபரப்பை ஏற்படுத்தினார் பார்த்திபன். அப்போது பேசிய ஏ.ஆர்.ரஹ்மான், “பார்த்திபனின் ’இரவில் நிழல்’ திரைப்படம் அமெரிக்கா, ஐரோப்பாவில் வெளியாகி இருந்தால் உலகமே கொண்டாடியிருக்கும். தமிழ் திரைக்கலைஞர்களிடம் பல திறமைகள் உள்ளன. நாம் நினைத்தால் எதையும் சாதிக்கலாம்” பாராட்டினார். தமிழ்த் திரையுலகினரும் இந்தப் படத்தைக் கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில், இந்தப் படம் கேன்ஸ் திரைப்பட விழாவில் திரையிடப்பட இப்பதாக பார்த்திபன் தெரிவித்துள்ளார்.

இதுபற்றி தனது சமூக வலைதளப் பக்கத்தில், ‘சர்வதேச திரைப் பட விழாவான கேன்ஸ் பட விழாவில் என் ‘இரவின் நிழல்’ திரையிடப்பட உள்ளது என்பதை மகிழ்ச்சி கலந்த உள்ளடக்கத்தோடு தெரிவித்துக்கொள்கிறேன். தமிழோடு கேன்ஸ் பறக்கத் தயாராகிறேன்’’ என்று குறிப்பிட்டுள்ளார். இதையடுத்து அவருக்கு திரையுலகினரும் ரசிகர்களும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in