இன்றோ நாளையோ ‘நிழல்’ வந்துவிடும்: ரசிகர்களுக்குப் பார்த்திபன் சிக்னல்

இன்றோ நாளையோ ‘நிழல்’ வந்துவிடும்: ரசிகர்களுக்குப் பார்த்திபன் சிக்னல்

‘இரவின் நிழல்’ திரைப்படம் அமேசான் ஓடிடி தளத்தில் இன்றோ அல்லது நாளையோ வெளிவந்துவிடும் என நடிகர் பார்த்திபன் தெரிவித்துள்ளார்.

பார்த்திபன் எழுதி, இயக்கி, நடித்து வெளியான ‘இரவின் நிழல்’ திரைப்படம் கடந்த ஜூலை 15ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இதில் வரலட்சுமி சரத்குமார், பிரியங்கா ருத், ரோபோ சங்கர் உள்ளிட்டவர்கள் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இந்தப்படத்திற்கு இசையமைத்திருந்தார். உலக அளவில் முதல் நான் லீனியர் சிங்கிள் ஷாட் படமாக இந்தப்படம் உருவானது. 64 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள நகரும் மற்றும் நகராத செட்டுகள் மூலம் காட்சிகள் உருவாக்கப்பட்டன.

இந்தப்படத்திற்கு பல்வேறு பாராட்டுகளும், நேர்மறை, எதிர்மறை விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டன. இந்நிலையில் இந்த படம் ஓடிடி தளத்தில் எப்போது வரும் என அவரது ரசிகர்கள் கேள்வி எழுப்பி இருந்தனர். இந்நிலையில் அதற்கு பதில் அளிக்கும் விதமாகப் பார்த்திபன் தனது முகநூல் பக்கத்தில், ‘அமேசானில் இன்றோ நாளையோ ‘இரவின் நிழல்’  வந்தே விடும்! அதை வரவேற்க நீங்களும், அறிவிக்க நானும் ஆவலுடன் இருக்கிறோம். பார்ப்போம்! நீங்கள் காட்டும் ஆர்வத்திற்கு நன்றி’ எனத் தெரிவித்துள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in