`உங்களது அசாத்திய முயற்சிக்கு பாராட்டுகள்'- நடிகர் பார்த்திபனை வாழ்த்தும் ரஜினிகாந்த்

`உங்களது அசாத்திய முயற்சிக்கு பாராட்டுகள்'- நடிகர் பார்த்திபனை வாழ்த்தும் ரஜினிகாந்த்

"இரவின் நிழல்" படத்தை அசாத்திய முயற்சியுடன் எடுத்துள்ள நடிகர் பார்த்திபனுக்கு நடிகர் ரஜினிகாந்த் பாராட்டு தெரிவித்துள்ளார்.

நடிகர் பார்த்திபன் இயக்கி நடித்துள்ள திரைப்படம் 'இரவின் நிழல்'. வரலக் ஷ்மி சரத்குமார், ரோபோ ஷங்கர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படம் 96 நிமிடங்கள் ஓடக்கூடியது. மேலும், ஒரே ஷாட்டில் படமாக்கப்பட்டுள்ளது. நான் லீனியர் திரைக்கதையில் சிங்கிள் ஷாட்டில் எடுக்கப்பட்ட உலகின் முதல் படம் என்ற பெருமையையும் இப்படம் பெற்றுள்ளது. பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

இந்நிலையில், இரவின் நிழல் படத்தை பார்த்தபின், இயக்குநர் பார்த்திபனுக்கு நடிகர் ரஜினிகாந்த் பாராட்டு மடல் எழுதியுள்ளார். அதில், "இரவின் நிழல்" படத்தை அசாத்திய முயற்சியுடன், ஒரே ஷாட்டில் முழு படத்தையும் எடுத்து, அனைவருடைய பாராட்டுகளையும் பெற்று, உலக சாதனை படைத்திருக்கும் நண்பர் பார்த்திபனுக்கும் அவரது அனைத்து படக்குழுவினருக்கும், ஏ.ஆர்.ரஹ்மானுக்கும், முக்கியமாக படம் பிடித்த ஒளிப்பதிவாளர் ஆர்தர் வில்சனுக்கும் எனது மனமார்ந்த பாராட்டுகளும், வாழ்த்துகளும்..!" என்று கூறியுள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in