
பிரபல இயக்குநர் டாரிஷ் மெர்ஜி படுகொலை செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரபல ஈரான் மொழி திரைப்பட இயக்குநர் டாரிஷ் மெர்ஜி. இவர், 'டைமண்ட் 33', 'தி கவ்', 'மிஸ்டர் நெயிவ்', 'தி லாட்ஜர்ஸ்', 'சாரா' போன்ற படங்களை இயக்கியுள்ளார்.
டாரிஷ் மெர்ஜி, தன்னுடைய படங்கள் வாயிலாக பல புரட்சிகரமான கருத்துக்களையும் தெரிவித்து வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. தன்னுடைய இயக்கத்திற்காக பல சர்வதேச விருதுகளையும் பெற்றுள்ளார். இந்நிலையில் ஈரானில் உள்ள கராஜ் நகரில் அவரது வீட்டில் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
இவருடன் இவரது மனைவி வஹிதா முகமதுவும், அவர்களது வீட்டில் படுகொலை செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இருவரது உடல்களிலும் பல இடங்களில் கத்திக்குத்து காயங்கள் காணப்பட்டுள்ளது.
கராஜில் இருந்து 30 கி.மீ. தொலைவில் தங்கியுள்ள டாரிஷ் மெர்ஜியின் மகள் மோனா மெர்ஜி, தற்செயலாக தனது பெற்றோரைக் காண்பதற்காக வீட்டுக்கு சென்றிருந்த போது, தனது பெற்றோர் படுகொலை செய்யப்பட்டிருப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக ஈரான் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். கடந்த சில வாரங்களுக்கு முன்பு சமூக வலைதளங்களில் தனக்கு கொலை மிரட்டல் வருவதாக வஹிதா முகமதிபார் போலீஸில் புகார் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் வாசிக்கலாமே...
அதிர்ச்சி... சென்னையில் டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வந்த சிறுவன் உயிரிழப்பு!
சோகம்... படகு கவிழ்ந்து விபத்து.. பலி எண்ணிக்கை 52 ஆக உயர்வு... 167 பேர் மாயம்!
அதிர்ச்சி... குளிக்க வைத்திருந்த வெந்நீர் கொட்டி 4 வயது குழந்தை மரணம்!
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இஸ்ரேல் பயணம்... போரின் உக்கிரம் குறையுமா?
என்னைக் கருணைக் கொலை செய்துவிடுங்கள்...மருமகள் கொடுமையால் கலெக்டரிடம் மூதாட்டி கதறல்!