நடிகர் சூர்யாவுக்கு ஆஸ்கர் அகாடமி அழைப்பு!

சூர்யா
சூர்யா

ஆஸ்கர் அகாடமியின் உறுப்பினர்களாக சேர உலக அளவில் 397 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதில் தமிழ் நாட்டைச் சேர்ந்த நடிகர் சூர்யாவின் பெயரும் இடம்பெற்றுள்ளதால் தமிழ் திரையுலகத்தினர் பெரிதும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

திரையுலகினருக்கு அமெரிக்காவில் வழங்கப்படும் அகாடமி விருது எனப்படும் ஆஸ்கர் விருது உலக புகழ்பெற்ற ஒன்றாகும். தங்கள் வாழ்நாளில் ஆஸ்கர் விருது பெறுவதை நடிகர்கள் உச்சபட்ச சாதனையாக கருதுவார்கள். பலகாலமாக இந்த விருதை பெற இந்திய சினிமாவுலகில் பலரும் முயற்சி செய்து வருகிறார்கள்.

கடந்த ஆண்டு சூர்யாவின் சூரரை போற்று ஆஸ்கர் விழாவுக்கு அனுப்பப்பட்டது. பரிந்துரைக்கு முன்னாள் இறுதி செய்யப்பட்ட 366 படங்களின் பட்டியலில் ஒரே ஒரு இந்திய படமாக சூரரை போற்று திரைப்படம் இருந்தது. ஆனால் அதற்கும் அடுத்த சுற்றில் எதிர்பாராத விதமாக வெளியேறியது.

இதனைத்தொடர்ந்து தற்போது நடிகர் சூர்யாவுக்கு ஆஸ்கர் அகாடமி அழைப்பு விடுத்துள்ளது. புகழ்பெற்ற மோஷன் பிக்சர் ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸ் அகாடமியில் சேர உலக அளவில் மொத்தம் 397 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அவர்களில் இந்தியாவில் இருந்து நடிகர் சூர்யா மற்றும் பாலிவுட் நடிகை கஜோல் ஆகிய இருவரின் பெயர்கள் இடம் பெற்றுள்ளது.

நடிகர் சூர்யாவுக்கு விடுக்கப்பட்டிருக்கும் இந்த அழைப்பு தமிழ் திரையுலகிற்கு கிடைத்திருக்கும் மிகப்பெரிய கவுரவமாக பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in