வேற வகை நடனம்: பிரபல ஹீரோ படத்தில் சர்வதேச டான்ஸ் மாஸ்டர்!

வேற வகை நடனம்: பிரபல ஹீரோ படத்தில் சர்வதேச டான்ஸ் மாஸ்டர்!
சர்வதேச நடனக் கலைஞர் ஷிபு அஷ்Michael Seirer

பிரபாஸ் நடிக்கும் படத்தில் சர்வதேச அளவில் புகழ்பெற்ற டான்ஸ் மாஸ்டர் இணைந்துள்ளார்.

நடிகர் பிரபாஸ், ஓம் ராவத் இயக்கும் 'ஆதிபுருஷ்', பிரசாந்த் நீல் இயக்கும் 'சலார்' படங்களில் நடித்து வருகிறார். இதற்கிடையே ’நடிகையர் திலகம்’ நாக் அஸ்வின் இயக்கும் படத்திலும் நடித்து வருகிறார். தற்காலிகமாக இந்தப் படத்துக்கு ’புராஜக்ட் கே’ என்று டைட்டில் வைத்துள்ளனர்.

சயின்ஸ் பிக்சன் படமான இதில், பிரபாஸ் ஜோடியாக தீபிகா படுகோன் நடிக்கிறார். முக்கியமான கதாபாத்திரத்தில் அமிதாப் பச்சன் நடிக்கிறார். பான் இந்தியா படமாக உருவாகும் இதில், அமிதாப்புடன் நடிக்கும் கனவு நனவாகிவிட்டதாகக் கூறியிருந்தார் பிரபாஸ்.

ஷிபு அஷ்
ஷிபு அஷ்

இந்தப் படத்தில் பாலிவுட் நடிகை திஷா பதானி இன்னொரு ஹீரோயினாக சமீபத்தில் இணைந்தார். இதன் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் பரபரப்பாக நடந்து வருகிறது. இந்நிலையில், புகழ்பெற்ற சர்வதேச நடனக்கலைஞர் ஷிபு அஷ் (Shifu Ash ) இந்தப் படத்தின் இணைந்துள்ளார்.

இதுவரை இந்திய சினிமாவில் கண்டிராத புதுமையான நடன காட்சி, படத்தில் இடம்பெறுகிறது. கம்பேட் டான்ஸ் (Combat dance) எனப்படும் தற்காப்புக் கலை, நவீன நடனம், மேடைப் போர் உள்ளடக்கிய ஒருவகை நடனம் முறையை இந்தப் படத்தில் அமைக்கின்றனர். இந்த நடனத்துக்காக சர்வதேச அளவில் புகழ்பெற்றவர் ஷிபு அஷ் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.