மிரண்டு ஓடிய ஒளிப்பதிவாளர்கள்... ஆச்சரியப்பட வைக்கும் கழுதையின் சம்பளம்: `இரவின் நிழல்' சுவாரஸ்யங்கள்!

மிரண்டு ஓடிய ஒளிப்பதிவாளர்கள்... ஆச்சரியப்பட வைக்கும் கழுதையின் சம்பளம்: `இரவின் நிழல்' சுவாரஸ்யங்கள்!

நடிகர் பார்த்திபன் இயக்கத்தில் உருவாகியுள்ள `இரவின் நிழல்' படத்தில் பல சுவாரஸ்யமான சம்பவங்கள் நடந்துள்ளன. இதில், கழுதையின் சம்பளம்தான் ஹைலைட்.

தான் எடுக்கும் படத்தில் பல வித்தியாசங்களை காட்டி அனைவரையும் திரும்பி பார்க்க வைத்து வருகிறார் நடிகரும், இயக்குநருமான பார்த்திபன். அந்த வகையில் தற்போது அவர் `இரவின் நிழல்' படத்தை ஒரே ஷாட்டில் எடுத்துள்ளார். பொதுவாக பார்த்திபன் படத்தில் வேலை பார்ப்பது மிகவும் கடினமானது என்று கூறப்பட்டு வந்தாலும், இரவின் நிழல் படத்தில் 15-வது ஒளிப்பதிவாளராக சேர்க்கப்பட்டார் கேமராமேன் ஆர்தர் வில்சன். இவருக்கு முன்னால் வந்த ஒளிப்பதிவாளர்கள் இந்த படத்தை பார்த்து மிரண்டுவிட்டார்களாம். பாதி பேர் படத்தை பற்றி கேட்ட உடனேயே சென்றுவிட்டார்களாம். மற்ற சிலர் படப்பிடிப்பு தொடங்கும் முன்பே ஓடிவிட்டார்களாம். அதில் முக்கியமானது, ஒளிப்பதிவு ஜாம்பவன்களான பிசி ஸ்ரீராம், ரத்னவேலு, ரவிவர்மன் போன்றவர்கள் முடியாமல் சென்றுவிட்டார்களாம்.

பார்த்திபனை பொறுத்தவரை படத்தை சிறிய பட்ஜெட்டில்தான் எடுப்பார். பிரம்மாண்ட செலவில் எந்த படத்தையும் அவர் இதுவரை எடுத்ததில்லை. ஆனால், இரவில் நிழல் படத்தில் ஒரு கழுதையின் கதாப்பாத்திரத்திற்கு 9 லட்சம் சம்பளம் வழங்கப்பட்டுள்ளதாம். இது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளதோடு, 90 நாட்கள் கால்ஷீட்டாம் இந்த கழுதைக்கு.

கதாப்பாத்திரத்துக்கு ஏற்றவாறு முகம் இருந்தால் போதும் தனது மனதில் பட்டவரை நடிக்க வைத்து அழகு பார்க்கும் பார்த்திபன், இந்த படத்தில் நடிகை ஒருவரின் டச்சப் பாயை தனது இளைய தோற்றத்தில் நடிக்க வைத்துவிட்டாராம். இப்படி பல சுவாரஸ்ய சம்பவங்கள் `இரவின் நிழல்' படத்தில் நடந்துள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in