2023 Rewind |ஹிட் லிஸ்ட் ட்ரெண்டான பாடல்கள்!

2023 Rewind |ஹிட் லிஸ்ட் ட்ரெண்டான பாடல்கள்!
1.

ரசிகர்கள் கேட்டு ரசிப்பதற்காக, கதையோட்டத்தில் அமைக்கப்படுகிற பாடல்கள் என்கிற காலமெல்லாம் கடந்து படத்தின் புரோமோஷனுக்காக ஒரு ஹிட் பாடல் என்ற ட்ரெண்டை நோக்கி நகர்ந்திருக்கிறது தமிழ் சினிமா. அப்படி இந்த வருடம் இளசுகள் மத்தியில் ட்ரெண்டாகி இன்ஸ்டாகிராமில் ரீல்ஸாகவும், வாட்ஸ்-அப்பில் ஸ்டேட்டஸாகவும் ஹிட்டடித்த பாடல்களின் வரிசையைப் பார்க்கலாம்.

2. ’வாரிசு’- ரஞ்சிதமே:

வம்சி இயக்கத்தில் விஜய், ராஷ்மிகா நடிப்பில் வெளியான ‘வாரிசு’ படத்தில், முதன்முறையாக விஜய் படத்திற்கு இசையமைத்தார் தமன். இதில் ‘ரஞ்சிதமே’ பாடலின் நடனம் ரசிகர்கள் மத்தியில் அதிரிபுதிரி ஹிட்டானது. ‘ரஞ்சிதமே’ மட்டுமல்லாது, படத்தில் இடம்பெற்ற மற்ற பாடல்களும் நல்ல வரவேற்பைப் பெற்றது. படம் சுமார் என்றாலும் பாடல்கள் படத்தில் சூப்பர் என்றனர் ரசிகர்கள்.

3. 'பத்துதல’- ராவடி: 

’மாநாடு’, ‘வெந்து தணிந்தது காடு’ படங்களுக்குப் பிறகு ‘பத்துதல’ படத்தில் நடித்தார் சிம்பு. இந்தப் படத்தில் சாயிஷா நடனம் ஆடிய ‘ராவடி’ பாடல் பயங்கர ஹிட் ஆனது. திருமணம், குழந்தை என சினிமாவிற்கு பிரேக் விட்ட சாயிஷா. இந்தப் பாடல் மூலம் கம்பேக் கொடுத்தார். இதுவரை இல்லாத அளவிற்கு கிளாமர் காட்டி அவர் போட்ட ஆட்டம் இன்ஸ்டாவில் தெறி ஹிட்டானது.

4. ’ராக்கி அவுர் ராணி கி பிரேம் கஹானி’- ஜூம்கா:

ரன்வீர், அலியா பட் ஜோடியின் துள்ளலான நடிப்பில் ’ராக்கி அவுர் ராணி கி பிரேம் கஹானி’ காதல் கதை ஹிட்டானது. ஃபீல் குட் படமாக வெளியான படத்தில், ஜூம்கா பாடல் நாடு முழுவதும் மொழி புரியாத நகரங்களிலும் ஹிட்டானது. குறிப்பாக பாடலில் வந்ததைப் போல ஹூக் ஸ்டெப்பை போட்ட இளசுகள், நடிகை அலியா போலவே சேலை அணிந்தும் ரீல்ஸ்களில் அசத்தினர்.

5. ’கிங் ஆஃப் கொத்தா’- கலாட்டாக்காரன்: 

சாக்லேட் ஹீரோவாக வலம் வந்த துல்கர் சல்மான் ரக்கட் பாயாக நடித்த ‘கிங் ஆஃப் கொத்தா’. இந்தப் படத்தில் ரித்திகா சிங் நடனமாடிய ’கலாட்டாக்காரன்’ பாடல் படத்தின் புரோமோஷனுக்காக எடுக்கப்பட்டது. பாடலும் எதிர்பார்த்தபடி ஹிட் ஆனது.

6. ’ஜெயிலர்’- காவாலா: 

ஒல்லி பெல்லி தமன்னா போட்ட கெட்ட ஆட்டமும் தெறிக்க வைத்தது. இந்த வருடத்தின் அதிரி புதிரி ஹிட்களில் 'ஜெயிலர்’ படத்தின் காவாலா பாடலுக்கும் இடமுண்டு.

’லஸ்ட் ஸ்டோரிஸ்2’ வெப் சீரிஸூக்குப் பிறகு வெளியான இந்தப் பாடல் தமன்னாவை இந்தியா முழுவதும் டிரெண்டாக்கியது. இவரின் ஹூக் ஸ்டெப்பில் சிம்ரன், ஐஸ்வர்யா ராய் என பல நடிகைகளை ஏஐ வெர்ஷனிலும் ரசிகர்கள் உருவாக்கி ரசித்தனர்.

7. ’லியோ’- நான் ரெடிதா வரவா:

’மாஸ்டர்’ படத்திற்குப் பிறகு லோகேஷ்- விஜய் காம்பினேஷன் ‘லியோ’ படத்தில் இணைந்தது. அனிருத் இசையில் வெளியான அனைத்து பாடல்களும் ஹிட். குறிப்பாக, ஃப்ளாஷ்பேக் காட்சிகளில் வரும் யங் விஜய்க்கான பாடலாக அமைந்த ‘நான் ரெடிதா வரவா’ பாடல். நடனமும், பாடலும் இன்ஸ்டாகிராம், ஸ்பாட்டிஃபை உள்ளிட்ட பல சமூகவலைதளங்களிலும் வைரலானது.

இதையும் வாசிக்கலாமே...


ஸ்ரீரங்கம் சொர்க்கவாசல் திறப்பு... விண்ணை பிளந்த கோவிந்தா... ரங்கா கோஷம்!

அதிர்ச்சி... 8வது மாடியிலிருந்து அறுந்து விழுந்த லிப்ட்; உயிருக்கு போராடும் 5 ஊழியர்கள்

47 ஆயிரத்தை தொட்டது தங்கம் விலை... நகைப்பிரியர்கள் அதிர்ச்சி!

2023 Rewind | சிவகார்த்திகேயன் முதல் த்ரிஷா வரை... பிரபலங்களைச் சுழற்றியடித்த சர்ச்சைகள்!

பாலச்சந்தர் நினைவு தின பகிர்வு | விசிட்டிங் கார்டு கொடுத்த எம்.ஜி.ஆர்... வளர்த்தெடுத்த நட்சத்திரங்கள்!

x
காமதேனு
kamadenu.hindutamil.in