இன்ஸ்டாகிராம் புகைப்படங்கள் நீக்கம்: நடிகை மஞ்சிமா மோகன் விளக்கம்!

இன்ஸ்டாகிராம் புகைப்படங்கள் நீக்கம்: நடிகை மஞ்சிமா மோகன் விளக்கம்!

தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து புகைப்படங்கள் நீக்கப்பட்டதற்கு நடிகை மஞ்சிமா மோகன் விளக்கம் அளித்துள்ளார்.

கெளதம் வாசுதேவ் மேனனின் ‘அச்சம் என்பது மடமையடா’ திரைப்படம் மூலமாக தமிழில் கதாநாயகியாக அறிமுகமானார் நடிகை மஞ்சிமா மோகன். அதன் பிறகு ‘சத்ரியன்’, ‘தேவராட்டம்’, ‘துக்ளக் தர்பார்’ உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். ‘தேவராட்டம்’ படத்தில் நடித்த கெளதம் கார்த்திக் உடன் இவருக்கு நட்பு ஏற்பட்டு பின்பு அது காதலாக மாறியது.

சமீபத்தில் நடிகர் கெளதம் கார்த்திக் மற்றும் மஞ்சிமா இருவரும் சமூக வலைதளங்களில் தங்களது காதலை புகைப்படங்களைப் பகிர்ந்து உறுதிப்படுத்தினர். இந்த நிலையில், சமீபத்தில் நடிகை மஞ்சிமா மோகன் இன்ஸ்டாகிராமில் தன்னுடையப் பழைய புகைப்படங்களை எல்லாம் நீக்கியுள்ளார். இது குறித்து ரசிகர்கள் எழுப்பியுள்ள கேள்விக்கு நடிகை மஞ்சிமா பதிலளித்துள்ளார்.

‘இன்ஸ்டாகிராம் தளம் என்பது மக்களுடன் இணைந்திருப்பதற்கு ஏற்ற எளிய அழகான தளம் என்பதை அறிவேன். அது எந்த அளவிற்கு அழகானது என்றோ ஆபத்தானது என்றோ நான் கவலைப்படவில்லை. அதனால், என்னுடைய பழைய புகைப்படங்களை நான் இன்ஸ்டாகிராமில் இருந்து தவிர்க்கிறேன். நான் மீண்டும் எல்லாவற்றையும் தொடங்குவேன்’ எனக் கூறியுள்ளார்.

இதுமட்டுமல்லாமல், ‘நான் முன்பெல்லாம் என் மீதே அதிகம் நம்பிக்கை இல்லாமல் இருப்பேன். ஆனால், முன்பு எப்போதும் இல்லாததை விட நான் அதிக நம்பிக்கயுடன் இருக்கிறேன். அதை நான் இன்னும் அதிகப்படுத்திக் கொண்டிருக்கிறேன்’ என்று இதற்கு விளக்கம் கொடுத்துள்ளார் நடிகை மஞ்சிமா மோகன்.

நடிகர் கெளதம் கார்த்திக்- மஞ்சிமா மோகன் இருவரது திருமணம் நவம்பர் மாதம் 28-ம் தேதி சென்னையில் நடக்க இருப்பதாகச் சொல்லப்படுகிறது. ஆனால், இது குறித்து தம்பதிகள் இருவரும் இன்னும் அதிகாரப்பூர்வமாக எதையும் அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in