காஷ்மீரில் 32 ஆண்டுகளுக்குப் பிறகு திறக்கப்படும் தியேட்டர்கள்: ஒளிரப்போகும் ஐநாக்ஸ் அரங்குகள்!

காஷ்மீரில் 32 ஆண்டுகளுக்குப் பிறகு திறக்கப்படும் தியேட்டர்கள்: ஒளிரப்போகும் ஐநாக்ஸ் அரங்குகள்!

காஷ்மீரில் 32 ஆண்டுகளுக்குப் பிறகு முதன்முறையாக சினிமா திரையரங்குகள் திறக்கப்படவிருக்கின்றன.

1990-ல் தீவிரவாத நடவடிக்கைகள் காரணமாகக் காஷ்மீர் பள்ளத்தாக்குகளில் திரையரங்குகள் மூடப்பட்டன. 32 ஆண்டுகள் கழிந்த நிலையில் தற்போது மல்டிபிளக்ஸ் திரையரங்குகள் அமைக்கப்பட்டு வருகின்றன.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு இந்திய அரசால் வழங்கப்பட்டிருந்த மாநில சிறப்பு அந்தஸ்து உரிமையை பல்வேறு எதிர்ப்புகளுக்கு மத்தியில் 2019ம் ஆண்டு மோடி தலைமையிலான அரசு நீக்கியது. மேலும் மாநிலமாக இருந்த ஜம்மு காஷ்மீரை லடாக் மற்றும் ஜம்மு காஷ்மீர் என இரண்டு யூனியன் பிரதேசங்களாக மத்திய அரசு பிரித்தது. அரசியலமைப்பு 370-ன் படி சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட பிறகு பிற மாநிலங்களில் உள்ளதைப்போல அப்பகுதியிலும் அனைத்து விதமான வசதிகளும் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றன. இந்நிலையில் ஜம்மு காஷ்மீரில் உள்ள ஸ்ரீநகரில் மல்டிபிளக்ஸ் திரையரங்குகளை ஐநாக்ஸ் நிறுவனம் வடிவமைத்துக் கொண்டிருக்கிறது. வரும் செப்டம்பர் முதல் மக்களின் பயன்பாட்டிற்கு திரையரங்குகள் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது குறித்து ஐநாக்ஸ் திட்ட மேலாளர் தெரிவிக்கையில், “30 வருடங்களுக்கு மேலாகக் காஷ்மீரில் திரையரங்குகளே இல்லை. அப்பகுதியில் நாங்கள் திரையரங்குகளைத் தொடங்க நினைத்தோம். நாட்டின் பிற பகுதிகளில் உள்ளது போல ஜம்மு பகுதி இளைஞர்களும் அனைத்து வசதிகளையும் பெற வேண்டும் என்ற நோக்கத்திலேயே மல்டிபிளக்ஸ் திரை அரங்குகளை அங்குத் தொடங்கியுள்ளோம். சொகுசு இருக்கைகள், சாதாரண இருக்கைகள், நவீன ஒலியமைப்பு உள்ளிட்ட வசதிகளுடன் கூடிய மூன்று மல்டிபிளக்ஸ் வளாகங்களை அமைத்துள்ளோம். உணவகங்களும், பொழுதுபோக்கு வசதிகளும் நிறைந்ததாக இந்த மல்டிபிளக்ஸ் அரங்குகள் அமைய இருக்கிறது.” என்கிறார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in