`இண்டிகோ விமான ஊழியர் முரட்டுத்தனமாக நடந்துகொண்டார்': பூஜா ஹெக்டே வேதனை

பூஜா ஹெக்டே
பூஜா ஹெக்டே

இண்டிகோ விமான ஊழியர் ஒருவர் தங்களிடம் முரட்டுத்தனமாக நடந்துகொண்டார் என முன்னணி நடிகை பூஜா ஹெக்டே ட்வீட் செய்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பான பூஜா ஹெக்டேவின் ட்விட்டில், "மும்பையிலிருந்து புறப்படும் இண்டிகோ விமானத்தில் அதன் ஊழியர் விபுல் நகாஷே இன்று எங்களிடம் மிகவும் முரட்டுத்தனமாக நடந்துகொண்டது மிகவும் வருத்தமாக இருக்கிறது. எந்த காரணமும் இல்லாமல் முற்றிலும் திமிர்பிடித்த, அறிவற்ற மற்றும் அச்சுறுத்தும் தொனியை எங்களிடம் பயன்படுத்தினார். பொதுவாக நான் இதுபோன்ற பிரச்சினைகளை பற்றி ட்வீட் செய்வதில்லை. ஆனால் இது உண்மையிலேயே பயங்கரமாக இருந்தது" என்று தெரிவித்துள்ளார்.

பூஜா ஹெக்டே தெலுங்கு மற்றும் தமிழ்த் திரையுலகில் முன்னணி நடிகையாக உள்ளார். இவர் சமீபத்தில் விஜய் நடிப்பில் வெளியான 'பீஸ்ட்' திரைப்படத்தில் நடித்திருந்தார். சில இந்தி படங்களிலும் இவர் நடித்துள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in