பிரபல நடிகையுடன் இந்திய கிரிக்கெட் வீரர் காதல்?: இன்ஸ்டாவில் வெளியிட்ட புகைப்படம் வைரல்

பிரபல நடிகையுடன் இந்திய கிரிக்கெட் வீரர் காதல்?: இன்ஸ்டாவில் வெளியிட்ட புகைப்படம் வைரல்

இந்திய கிரிக்கெட் வீரர் பிரித்விஷா, நடிகை நித்தி தபாடியாவுடன் இருக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். எனவே, அவர் நடிகையை காதலிப்பதாக தகவல் பரவியுள்ளது.

நடிகை நித்தி தபாடியா.
நடிகை நித்தி தபாடியா.

பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் பிரித்விஷாவும், நடிகை நித்தி தபாடியாவும் காதலிப்பதாக சமூக வலைதளங்களில் செய்தி பரவி வருகிறது. இந்த நிலையில், தனது வீட்டில் நடைபெற்ற தசரா விழாவை முன்னிட்டு நடிகை நித்தி தபாடியாவுடன் சேர்ந்து எடுத்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிரித்விஷா வெளியிட்டுள்ளார். அதில், ' தனக்கு கர்பா நடனம் கற்றுக்கொடுத்தமைக்கு நன்றி' என்று நித்தி தபாடியாவைக் குறிப்பிட்டுள்ளார்.

இந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.' நெருப்பு இல்லாமல் புகையுமா? காதல் இல்லாமல் ட்விட்டரில் படம் கசியுமா?' என்று நெட்டிசன்கள் பிரித்விஷாவை கலாய்த்து வருகிறார்கள்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in