வைரலாகும் 'இந்தியன் 2' கமல்ஹாசன் புகைப்படம்

வைரலாகும் 'இந்தியன்  2' கமல்ஹாசன் புகைப்படம்

'இந்தியன் 2' படத்திற்க்காக நடிகர் கமல்ஹாசனுக்கு மேக்கப் போடும் புகைப்படம் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் 'இந்தியன்' திரைப்படம் வெளியாகி 25 ஆண்டுகளாகிறது. தற்போது ஷங்கர் இயக்கத்தில் 'இந்தியன்' படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது.

'இந்தியன் 2' படத்தின் படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட விபத்து காரணமாக பாதியிலே படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. தற்போது படப்பிடிப்பு மீண்டும் தொடங்கி நடந்து வருகிறது. இப்படத்தில் கமல்ஹாசனோடு சமுத்திரக்கனி, பாபி சிம்கா, காஜல் அகர்வால், சித்தார்த், ராகுல் பிரீத் சிங், பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். அனிருத் இசையமைக்கும் இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது.

இந்நிலையில் 'இந்தியன் 2' படப்பிடிப்பு தளத்தில் கமலுக்கு மேக்கப் போடுவது போன்ற புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. இது கமல் ரசிகர்களால் இணையதளத்தில் வைரலாக்கப்பட்டு வருகிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in