ஏப்ரலில் ரிலீஸாகும் கமல்ஹாசனின் 'இந்தியன் 2'!

'இந்தியன் 2' படத்தில் கமல்ஹாசன்
'இந்தியன் 2' படத்தில் கமல்ஹாசன்

நடிகர் கமல்ஹாசன் நடிக்கும் 'இந்தியன் 2' படம் ஏப்ரல் மாதம் வெளியாகிறது. இதற்காக மார்ச் மாத இறுதிக்குள் படத்தின் ஒட்டுமொத்த பணிகளையும் முடிக்க இயக்குநர் ஷங்கர் திட்டமிட்டுள்ளார்.

'இந்தியன் 2' படத்தில் கமல்ஹாசன்
'இந்தியன் 2' படத்தில் கமல்ஹாசன்

நடிகர் கமல்ஹாசன், காஜல் அகர்வால், சித்தார்த், பாபி சிம்ஹா, பிரியா பவானி சங்கர், எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்டோர் நடிப்பில் 'இந்தியன் 2' திரைப்படம் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது. ஷங்கரின் இயக்கத்தில் பெரும் பொருட்செலவில் உருவாகும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

கமல்ஹாசன், ஷங்கர்
கமல்ஹாசன், ஷங்கர்

'இந்தியன் 2' பாகத்திற்கான அனைத்துக் கட்டப் படப்பிடிப்பு வேலைகளும் நிறைவடைந்துள்ளன. இந்த நிலையில், படத்தில் வரக்கூடிய CG மற்றும் VFX காட்சிகளுக்கான பணிகளில் படக்குழு தீவிரமாக இறங்கியுள்ளது. இப்படத்திற்காக ஏற்கெனவே 50 சதவீதத்திற்கும் மேற்பட்ட கிராபிக்ஸ் பணிகள் நிறைவடைந்த நிலையில் இறுதிக்கட்ட நேரத்தில் எடுக்கப்பட்ட புதிய காட்சிகளுக்கான கிராபிக்ஸ் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.

'இந்தியன்' முதல் பாகத்தை விட இரண்டாம் பாகத்தில் அதிக CG மற்றும் VFX காட்சிகள் இடம் பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏப்ரல் மாதத்தில் படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. இதற்காக மார்ச் இறுதிக்குள்ளாக படத்தின் ஒட்டுமொத்த பணிகளையும் நிறைவு செய்ய இயக்குநர் ஷங்கர் திட்டமிட்டு பணியாற்றி வருகிறார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in