பிரபல சினிமா தயாரிப்பாளர்கள் அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிரடி ரெய்டு!

பிரபல சினிமா தயாரிப்பாளர்கள் அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிரடி ரெய்டு!

பிரபல சினிமா தயாரிப்பாளர்கள் அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.

சினிமா பைனான்சியர் அன்புச்செழியன், கோபுரம் பிலிம்ஸ் என்ற நிறுவனம் மூலம் படங்களைத் தயாரித்து வருகிறார். விக்ரம்பிரபு நடித்த 'வெள்ளாக்கார துரை', தனுஷ் நடித்த 'தங்கமகன்', விஷால் நடித்த 'மருது', விஜய் சேதுபதி நடித்த 'ஆண்டவன் கட்டளை' படங்களைத் தயாரித்துள்ளார். ஏராளமான படங்களை விநியோகமும் செய்துள்ளார். சென்னை, மதுரையில் உள்ள இவருக்குச் சொந்தமான 40 இடங்களில் வருமான வரித்துறையினர் இன்று காலை அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.

அன்புச் செழியன்
அன்புச் செழியன்

அன்புச் செழியன் வீட்டில் வருமான வரி சோதனை நடப்பது மூன்றாவது முறை ஆகும்.

தயாரிப்பாளர் தாணு
தயாரிப்பாளர் தாணு

இதையடுத்து மேலும் சில தயாரிப்பாளர்களின் வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரி சோதனை நடைபெற்று வருகிறது.

பிரபல தயாரிப்பாளர் ட்ரீம் வாரியர்ஸ் நிறுவனத்தின் எஸ்.ஆர்.பிரபு, ஸ்டூடியோ கிரீன் ஞானவேல்ராஜா, கலைப்புலி எஸ். தாணு ஆகியோர் அலுவலகங்களிலும் வருமான வரிச் சோதனை நடைபெற்று வருகிறது. இன்று காலை முதல் நடந்து வரும் இந்தச் சோதனை தமிழ் சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in