‘சார்பட்டா பரம்பரை2’ வெளியாவது தியேட்டரா, ஓடிடியா?- ரசிகர்களிடையே எகிறும் எதிர்பார்ப்பு

சார்பட்டா பரம்பரை
சார்பட்டா பரம்பரை‘சார்பட்டா பரம்பரை2’ வெளியாவது தியேட்டரா, ஓடிடியா?- ரசிகர்களிடையே எகிறும் எதிர்பார்ப்பு

இரஞ்சித் இயக்கத்தில் உருவாக இருக்கும் ‘சார்பட்டா பரம்பரை2’ எதில் வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே இருக்கிறது.

இரஞ்சித் இயக்கத்தில் நடிகர்கள் ஆர்யா, துஷாரா விஜயன் ஆகியோர் நடிப்பில் கடந்த 2021-ம் ஆண்டு ‘சார்பட்டா பரம்பரை’ திரைப்படம் வெளியானது. கொரோனா காரணமாக இந்தப் படம் ஓடிடியில் வெளியானது. இப்போது நடிகர் விக்ரம் உடன் இரஞ்சித் ‘தங்கலான்’ படத்தில் பிஸியாக இருக்கிறார். இதன் படப்பிடிப்பு கர்நாடகாவில் பரபரப்பாக நடந்து கொண்டிருக்கும் சமயத்தில் யாரும் எதிர்பாராத விதமாக நேற்று மாலை ‘சார்பட்டா’ பரம்பரை படத்தின் இரண்டாம் பாகம் குறித்தான அறிவிப்பு வெளியானது. இதிலும் நடிகர் ஆர்யா முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ’தங்கலான்’ படப்பிடிப்பு விரைவில் முடிவடைய இருக்கிறது. மேலும் ‘இந்தியன்2 உள்ளிட்டக் காரணங்களால் கமல்ஹாசனும் பிஸியாக உள்ளார்.

இதனால், இரஞ்சித்-கமல் இணையும் படம் சற்று தாமதமாக தொடங்க இருக்கிறது. இதனால், ’சார்பட்டா’ படத்தின் இரண்டாம் பாகம் குறித்தான அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. இந்தப் படம் முடித்ததும் அடுத்து இரஞ்சித் கமல் படத்தில் இணைய இருக்கிறார். இந்த இரண்டாம் பாகம் நிச்சயம் திரையரங்குகளில்தான் வெளியாகும் என்கின்றனர். ஏனெனில், முதல் பாகம் ஓடிடியில் வெளியான போதே நல்ல வசூல் குவித்தது. இந்தப் பாகம் திரையரங்குகளில் வெளியானால் நிச்சயம் நல்ல வரவேற்பு பெரும் என்ற நம்பிக்கையில் படக்குழு உள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in