தெற்கில் `அவதார்2’ படத்திற்குக் குவியும் கவனம்!

தெற்கில் `அவதார்2’ படத்திற்குக் குவியும் கவனம்!

தெற்கில் ‘அவதார் 2’ படத்திற்குக் கவனம் குவிந்துள்ளது.

ஹாலிவுட்டின் முன்னணி இயக்குநரான ஜேம்ஸ் கேம்ரூனின் ‘அவதார்’ திரைப்படம் கடந்த 2009-ம் ஆண்டு வெளியானது. படத்திற்கு ஹாலிவுட் மட்டுமல்லாது, உலகம் முழுவதும் இந்தத் திரைப்படம் கவனம் ஈர்த்தது. வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் இந்தப் படம் வரவேற்பைப் பெற்றது. படம் வெளியான சமயத்திலேயே இந்தப் படத்தின் அடுத்த பாகத்திற்கான எதிர்ப்பார்ப்பு இருந்தது. இதனை அடுத்து, இந்தப் படத்தின் அடுத்த பாகம் டிசம்பர் மாதம் 16-ம் தேதி வெளியாக இருக்கிறது.

இயக்குநர் ஜேம்ஸ் கேமரூனின் அவதார்: தி வே ஆஃப் வாட்டர் படத்தின் காட்சிகள் சினிமா சந்தையில் தற்போது பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஐந்து நாட்களுக்கு முன்புத் தொடங்கிய இந்தப் படத்தின் முன்பதிவுகள் எதிர்பார்த்ததை விடவும் குறிப்பாக தெற்கில் நன்றாகவே உள்ளது.

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாத் துறையைச் சேர்ந்த விநியோகஸ்தர்கள் தங்களுடைய மாநிலங்களில் ‘அவதார் 2’ படத்தை வெளியிடுவதற்காக 100-150 கோடி ரூபாய் பணத்தை கொடுத்து தங்களுடையத் திரையரங்குகளில் வெளியிட முடிவு செய்துள்ளனர். இதுமட்டுமல்லாமல், தமிழ் மற்றும் மலையாள விநியோகதஸ்தர்களும் இந்தப் படத்தைப் பெறுவதற்காக மிகப் பெரிய விலைக் கொடுக்க முன்வந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in