புதுச்சேரியில் ‘லியோ’ படத்துக்கு காலை 7 மணி காட்சிக்கு அனுமதி!

லியோ
லியோ

புதுச்சேரியில் லியோ திரைப்படத்துக்கு காலை 7 மணி காட்சிக்கு அனுமதி அளிக்கப்படுகிறது என ஆட்சியர் வல்லவன் தெரிவித்தார்.

நடிகர் விஜய் நடிப்பில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள லியோ திரைப்படம் வரும் 19ம் தேதி வெளியாகிறது. தமிழகத்தில் காலை 9 மணி முதலே இப்படத்துக்கு காட்சிகள் திரையிடப்படுகின்றன. இதையடுத்து காலை 7 மணிக்கு காட்சிகளை திரையிட அனுமதிக்க வேண்டும் என பட தயாரிப்பு நீதிமன்றத்தை அணுகியது. பின்னர் 7 மணி காட்சிக்கு தமிழக அரசிடம் உரிய அனுமதி கோரி மனுதாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

இந்தநிலையில்தான், புதுச்சேரியில் காலை 7 மணி காட்சி உட்பட லியோ திரைப்படத்துக்கு நான்கு நாட்களுக்கு 5 காட்சிகள் திரையிட அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக ஆட்சியர் வல்லவன் அறிவித்துள்ளார் புதுச்சேரி நகரம் மற்றும் கிராமப்புறங்களில் உள்ள 15 தியேட்டர்களில் லியோ திரைப்படம் திரையிடப்படுகிறது. இதுமட்டுமின்றி ரசிகர்கள் சார்பில் 19ம் தேதி காலை 7 மணிக்கு சிறப்பு காட்சிக்கு அனுமதி கோரி அரசுக்கு மனு அளிக்கப்பட்டது. அதன்படி, சிறப்பு காட்சிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ரசிகர்கள் சிறப்பு காட்சிக்கான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என ஆட்சியர் வல்லவன் தெரிவித்துள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in