மரியாதை குடுங்க... கண்கலங்கும் விசித்ரா... கட்டம் கட்டும் மாயா, பூர்ணிமா!

விசித்ரா
விசித்ரா

பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியில் விசித்ரா கண்கலங்கியபடி பேசும் புரோமோ ஒன்று மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்குள் பிரச்சினையை ஆரம்பித்து வைத்துள்ளது என ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.

பிக் பாஸ் இல்லத்திற்குள் மீண்டும் சர்ச்சை வெடிக்க ஆரம்பித்திருக்கிறது. தனக்கு ஐம்பது வயதாகிறது எனவும் பிக் பாஸ் இல்லத்தில் அனைவருமே தனது பிள்ளைகள் போலதான் எனவும் வந்ததில் இருந்தே விசித்ரா சொல்லி வருகிறார். தான் அம்மா போலதான் இந்த இல்லத்தில் நடந்து கொள்வதாகவும் ஆனால், பலபேர் தனக்கு மரியாதையே தருவதில்லை எனவும் அவர் இந்த குற்றச்சாட்டையும் சொல்லி வருகிறார். இந்த நிலையில், தற்போது பிக் பாஸ் இல்லத்திற்குள் ஒருவரை போல இன்னொருவர் இமிட்டேட் செய்யும் டாஸ்க் நடந்து கொண்டிருக்கிறது.

இதில் தினேஷ்- விஷ்ணு இடையே சண்டை நிகழும்படியான புரோமோ காலை வெளியாகி இருக்க இப்போது தனக்கு மரியாதை தர வேண்டும் என விசித்ரா கண்கலங்கி பேசும்படியான புரோமோ வெளியாகியுள்ளது.

கூல் சுரேஷைப் போல வேடமிட்டுள்ள விசித்ரா, ”நான் இந்த வீட்டில் அம்மாவாக நடிக்கவில்லை. விக்ரமை பார்த்தால் என் பையன் மாதிரி தான் தோன்றுகிறது. அதை கிண்டல் செய்து டிராமானு பேசும் போது அது என்னை கஷ்டப்படுத்துகிறது. அதேபோல என்னை அனைவரும் விசித்ரா மேம் என்று கூப்பிடுங்கள். மரியாதை இல்லாமல் அழைப்பது வருத்தமா இருக்கு. இந்த 50 வயசுல வந்து நிறைய பேர் எதுவுமே இல்லாமல் இருக்கிறார்கள். இப்போ நான் விட்டு கொடுத்தால், அது ரொம்ப தப்பா போய்விடும்” என்று சொல்லி கண்கலங்குகிறார்.

அப்போது, பூர்ணிமா மற்றும் மாயா இருவரும் ”அப்போ நீங்களும் என்னை மேம் என்று கூப்பிடுங்கள்” என்று சொன்னதை கேட்டு விசித்ரா கண் கலங்கி அங்கிருந்து கிளப்பினார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in