பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய ஐஷூ
பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய ஐஷூ

வெளியேறிய ஐஷூ... கதறி அழுத நிக்சன்... சைலண்ட்டாக கேலி செய்த கமல்!

பிக் பாஸ் தமிழ் இல்லத்தில் இருந்து ஐஷூ நேற்று வெளியேற்றப்பட்டிருப்பதற்கு நிக்சன் கதறி அழுதது மட்டுமல்லாது பார்வையாளர்களையும் உள்ளே போட்டியாளர்களையும் திட்டி பேசியிருக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.

பிக் பாஸ் இல்லத்திற்குள் கடந்த ஒருவாரமாகவே பிரதீப் ரெட் கார்டு விவகாரம் கடும் விவாதத்தை உருவாக்கி இருக்கிறது. மேலும், கமல்ஹாசன், பிரதீப் பேசுவதற்கான இடம் கொடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டும் அவர் மீது வைக்கப்பட்டது. இதற்கு விளக்கம் கொடுக்கும் விதமாகவும் மாயா, பூர்ணிமா, ஜோவிகா கேங்குடன் விசாரணை நடத்தினார் கமல்ஹாசன். அவர்கள் இறுதி வரை பிரதீப்பால் தங்களுக்கு பாதுகாப்பு இல்லை என்ற விஷயத்தில் உறுதியாக இருந்தனர். மேலும், பிரதீப்பிடம் விளக்கம் கேட்டபோது, அந்தத் தவறை அவர் உணர்ந்து மன்னிப்பு கேட்கத் தயாராக இல்லை எனவும் அப்படியே அவர் பேசினாலும் தான் அப்படித்தான் வளர்ந்தேன் எனப் பேசிக் கொண்டே போனதாலும்தான் அவரை மேற்கொண்டு பேச விடாமல் ரெட் கார்டு கொடுத்ததாகவும் கமல் கூறினார்.

மேலும், பிரதீப்புக்கு ரெட் கார்டு கொடுக்கலாமா அல்லது இன்னொரு வாய்ப்புக் கொடுக்கலாமா எனக் கேட்டபோது ரெட் கார்டு கொடுக்க வேண்டும் என்பதே பெரும்பாலான போட்டியாளர்களின் முடிவாக இருந்ததாகவும் அதைத்தான் நான் செய்தேன் எனவும் கமல் விளக்கினார். முன்பே வெளியானத் தகவலை உறுதிப்படுத்தும்படி, ஐஷூ பிக் பாஸ் இல்லத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார். அவர் வெளியேறியதும் நிக்சன் கதறி அழ அகம் டிவி வழியே அவரைப் பார்த்த ஐஷூ சமாதானப்படுத்தினார்.

இதற்கு பார்வையாளர்கள் சிரிக்க, கமலும் அமைதியாக சிரித்துக் கொண்டே நக்கலாக அதைப் பார்த்துக் கொண்டிருந்தார். இதுமட்டுமல்லாது, ஐஷூ வெளியேறியதற்கு பிக் பாஸ் இல்லத்தில் இருந்த போட்டியாளர்களும் வெளியே இருந்த பார்வையாளர்களும்தான் காரணம் என நிக்சன் சொல்லி கதறி அழுது கொண்டிருந்தார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in